அப்பா
அம்மா நமக்கு வரம்
அணைக்காமல் அடிக்கலாமா?
நான் இருப்பேன்
தள்ளாடும் வயதில்
ஊன்றுகோலாய்...!
கல்வி போதுமெனக்கு
கற்றதன் பாதையில்
உற்றவர்களை காத்திடுவேன்...!
எதிரிகளை இனங்கண்டு
வீழ்த்தும் சக்தியும்..!
ஆடை கிழித்து உறுப்புகளை
உபத்திரவப்படுத்தும் உறுப்புதனை
அறுத்தெறியும் சக்தியும்..!
ஆணினம் தனை நண்பனாய்
ஆக்கும் சக்தியும்...
வன்முறைதனை
வருடும் தென்றலாய்
வகுத்திடும் சக்தியும்.
.பெற்றே
காத்திடுவேன் காலமெல்லாம் ....
உங்களை....!
காத்திடவே உதித்த என்னை
என்கனவினைக் கருக்கி
கருவிலேயே சிதைத்தது....
ஏன்”பா”?!
அம்மா நமக்கு வரம்
அணைக்காமல் அடிக்கலாமா?
நான் இருப்பேன்
தள்ளாடும் வயதில்
ஊன்றுகோலாய்...!
கல்வி போதுமெனக்கு
கற்றதன் பாதையில்
உற்றவர்களை காத்திடுவேன்...!
எதிரிகளை இனங்கண்டு
வீழ்த்தும் சக்தியும்..!
ஆடை கிழித்து உறுப்புகளை
உபத்திரவப்படுத்தும் உறுப்புதனை
அறுத்தெறியும் சக்தியும்..!
ஆணினம் தனை நண்பனாய்
ஆக்கும் சக்தியும்...
வன்முறைதனை
வருடும் தென்றலாய்
வகுத்திடும் சக்தியும்.
.பெற்றே
காத்திடுவேன் காலமெல்லாம் ....
உங்களை....!
காத்திடவே உதித்த என்னை
என்கனவினைக் கருக்கி
கருவிலேயே சிதைத்தது....
ஏன்”பா”?!
சரியான கேள்வி...
ReplyDelete(முதலில் ஏம்மா...?)
நன்றிசார்
Deleteஏன்பா?
ReplyDeleteசிந்தனையினைத் தூண்டும் கேள்வி.
ஆமாம்.. ஏ...ன்.பா..... ஏ..ன்....மா....:)
ReplyDeleteஅருமையான சிந்தனை!..
வாழ்த்துக்கள்!
நன்றி தோழி
Deleteஅருமையான சிந்தனை. ஏன்பா கேள்வியும் சிந்தனையின் உச்சம். பகிர்வுக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteநன்றி சகோ
Delete