எண்ணக்கோவைகளை
வண்ண மாலையாக்கி
அன்பை பகிர்ந்த மடல்கள்..
உணர்வுகளை உசுப்பிய எழுத்துக்கள்
மனதைக் கீறிய மடலில்....
உறவுகளின் உணர்வுகளையும்,
முகங்களையும் பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்.....
அழகான கையெழுத்து
ஆசையுடன் படிக்கத்தூண்ட
கோழிக்கால் எழுத்தோ
எப்போது முடியுமென்க...
யாருமறியா மருத்துவரின் எழுத்தோ
மருந்துக் கடைக்காரருக்கு மட்டும்
எப்படி..?
கையெழுத்து வேலை வாங்கித்தந்ததுண்டு...!
பள்ளியோடு பலருக்கும்
கல்லூரியோடு சிலருக்கும்
தற்கொலையாகின்றது ....!
அழிந்து போன கடிதங்களில்
கையெழுத்தின் சுவையறியுமோ
இக்கால சந்ததி...?
வண்ண மாலையாக்கி
அன்பை பகிர்ந்த மடல்கள்..
உணர்வுகளை உசுப்பிய எழுத்துக்கள்
மனதைக் கீறிய மடலில்....
உறவுகளின் உணர்வுகளையும்,
முகங்களையும் பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்.....
அழகான கையெழுத்து
ஆசையுடன் படிக்கத்தூண்ட
கோழிக்கால் எழுத்தோ
எப்போது முடியுமென்க...
யாருமறியா மருத்துவரின் எழுத்தோ
மருந்துக் கடைக்காரருக்கு மட்டும்
எப்படி..?
கையெழுத்து வேலை வாங்கித்தந்ததுண்டு...!
பள்ளியோடு பலருக்கும்
கல்லூரியோடு சிலருக்கும்
தற்கொலையாகின்றது ....!
அழிந்து போன கடிதங்களில்
கையெழுத்தின் சுவையறியுமோ
இக்கால சந்ததி...?
வணக்கம் சகோதரி.
ReplyDeleteகவிதை கருமை. கால வெள்ளத்தில் காகிதம் என்பதால் அடித்து செல்லப்பட்டு விட்டது போலும். இக்கால சந்ததியினர் அறிய அரிய வாய்ப்பும் இல்லாமலே போய்விட்டது. பகிர்வுக்கு நன்றி.
உண்மைதான்.வரவிற்கு நன்றி சகோ
Deleteசரியாக சொன்னீர்கள் சகோதரி !
ReplyDeleteகடிதங்கள் என்றும் நினைவில் நிற்பவை
இன்றைய குறுஞ்செய்திகளில் வரும் வாழ்த்து ணன் தோழியின் கையெழுத்தோடு வரும் வாழ்த்து மடலுக்கு ஒருபோதும் ஈடாவதில்லை
இன்றும் என்னுடன் வசிக்கின்றன .எனக்காக அனுப்பப்பட்ட மடல்கள் ,வாழ்த்துகள்,பார்க்கும் போதெல்லாம் என் வயதை குறைத்துவிடுகின்றன
Deleteவணக்கம் இனிய தோழி!
ReplyDeleteதித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
அங்கு உங்கள் வருகை கண்டேன்.. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்!
வண்ணக் கலவையை
எண்ணக் கோர்வையாக்கி
கண்ணைப்பறிக்கும் கையெழுத்து
சின்னதானாலும் சிந்தையில் நிற்குமன்றோ...
மின்னும் கற்பனை
என்னவெனச்சொல்ல...
இனிமை! வாழ்த்துக்கள்!
மிகவும் அருமையாக உள்ளது உங்களின் வலைத்தளம்.மனதுக்கு ரம்யமாக .நன்றி
Delete///அழிந்து போன கடிதங்களில்
ReplyDeleteகையெழுத்தின் சுவையறியுமோ
இக்கால சந்ததி...?///
நன்று சொன்னீர் சகோதரியாரே
கடிதத்தின் பெருமையை
இன்று யாரறிவார்
எல்லாம்
எஸ்.எம்.எஸ்.,
எஸ்.எம்.எஸ்,.
என்று
குறுகியள்ளவா போய்விட்டது
நன்றி சார்
Deleteகடிதங்கள் அழியலாம்
ReplyDeleteகையெழுத்தும் மறையலாம்
உசுப்பிய உணர்வுகளும்
உருவாக்கிய எண்ணங்களும் ஒருபோதும் அழியாது. உணர்ந்தோரன்றி யாரறிவார்?
உண்மைதான் அய்யா .நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் கற்பனை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி
Deleteஉண்மை!
ReplyDelete//அழிந்து போன கடிதங்களில்
கையெழுத்தின் சுவையறியுமோ
இக்கால சந்ததி...// வருந்துவதா? வேண்டாமா என்றே தெரியவில்லை தோழி!! எழுதுவது நல்லதாம்..மூளைக்கும் கைக்குமான ஒருங்கிணைப்பு பயிற்சியாம்..எழுதுவது அழிகிறதே என்று சொன்னால் கற்கால மனுசியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்!!!