Wednesday, 27 November 2013

எழுவாய் தோழா!




நெகிழியால் புவி மூடி
குடிநீருக்கும் விலை தந்து
நிலமும்,புனலும்,காற்றும்
கழிவாலே நஞ்சாக..

ஓசோன் கிழிந்து
விண்வெளியும் குப்பையாக
செய்தியாய் செரிக்கின்றோம்...

சிதைந்த சித்திரமாய்
சிதைகின்ற பூமி
உருக்குலையும் முன்
ஞாலம் காக்க
எழுவாய் தோழா...!

வலியின்றி உயிரில்லை
வன்மையின்றி வாழ்வில்லை
மண் கீறி கருப்பைக் கிழித்து
உலகு காணும் உயிரினம்...!

தருவாய் துளிர்ப்பாய்..
பூவாய் மலர்வாய்..
தடைக்கல்லும் படிக்கல்லாய்
தனியாப் புகழ் பெறுவாய்...

”மானிடனே”

7 comments:

  1. அருமையான விழிப்புணர்வோடு கூடிய தகவல்
    சிதைந்த சித்திரமாய்
    சிதைகின்ற பூமி
    உருக்குலையும் முன்
    ஞாலம் காக்க
    எழுவாய் தோழா...!
    வார்த்தைகளும் அழகாய் வந்திருக்கிறது.
    நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  2. நன்றி தோழி.தங்களின் வாழ்த்துக்கள் மேலும் எழுத தூண்டுகின்றன.

    ReplyDelete
  3. தனியாப் புகழ் நோக்கி கவிஞரை செலுத்தும் இன்னொரு கவிதை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சமுக சிந்தனையுள்ள கவிதை .அருமை

    ReplyDelete
  5. அருமை... உணர வேண்டிய கருத்துக்கள்...

    ReplyDelete
  6. //விண்வெளியும் குப்பையாக
    செய்தியாய் செரிக்கின்றோம்...// உண்மைதான் !

    அருமையானக் கவிதை கீதா! தொடருங்கள்..

    ReplyDelete
  7. சிதைந்த சித்திரமாய்
    சிதைகின்ற பூமி
    உருக்குலையும் முன்
    ஞாலம் காக்க
    எழுவாய் தோழா...!

    அருமை
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...