Thursday, 24 October 2013

விடம்

விடம்

கடைசி சொட்டு
அருந்தும் போது
என்ன நினைத்தாய் தோழி..

சாய்ந்து கொள்ள தோள்
வேண்டுமென்றா?

வாங்கி வைத்த துணிகளை
வடிவமைக்காமல்
விட்டோமேயென்றா..?

யாரேனும் வந்து மூழ்கும்
உன்னை கரை சேர்க்க மாட்டர்களாவென
கை நீட்டி துடித்திருப்பாய்...

இன்றில்லாத பணம்
நாளை வரலாம்.இனி
நீ வருவாயோ ஹேமா..

அமைதியான புன்சிரிப்பு
அதிராத கனிபேச்சு
அடக்கமான வாழ்வு
அடங்கியே போனதேனம்மா
உன் மூச்சு..


 நம்ப மறுக்கின்றது மனம்
கடன் கல்லறைக்கு உன்னை
கட்டி இழுத்த கொடுமையை..

பணம் பிணமாக்கிய
கொடூரத்தை...

15 comments:

  1. நானும் செய்தி அறிந்து அதிர்ந்து தான் போனேன்.
    என் மகள் சிறுமியாக இருந்ததிலிருந்து அவரிடம்தான் தைக்கக் கொடுப்போம். பொறியியல் சேர்ந்த பின் அவள் சுடிதார் தைக்கச் சென்றபோது “லட்சியா நல்லா படிக்கிறியா?” என்று கேட்ட அந்தக் கனிவான குரல் வெறும் வியாபாரக் குரலாகத் தோன்றவில்லை, இன்று அதே குரல் இனம்புரியாத சோகத்தை எனக்குள் எழுப்புகிறது. புதுக்கோட்டையின் இருபெரும் தையல் நிறுவன நிர்வாகிகள் இவ்வளவு கோழைகளாக இருந்திருப்பது அதிர்ச்சியளித்தது. இந்தச் சமூக முரண் இன்னும் எத்தனை இழிவை நமக்குத் தரப்போகிறதோ தெரியவில்லை. கவிதை உணர்வுபூர்வமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. சொல்ல முடியா மனச்சுமை .பழகியது குறைவான காலம் என்றாலும் பூவிற்கு கூட வலிக்காது அவர் பேச்சு.என்ன சொல்ல உயிர் மிகவும் மலிவானப் பொருளாய்ப் போன சோகம்

      Delete
  2. நண்பர்களின் பிடித்த வலைப்பக்க இணைப்பு என்னாச்சு?
    சரியான காரணம் ஏதாவது இருந்தால் தெரிவித்து உதவுக...

    ReplyDelete
    Replies
    1. சார் .அது எப்ப்டின்னு தெரியல இன்று வாய்ப்பு இருப்பின் வருகிறேன்.என் பிழைகளை சுட்டியது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.நன்றி

      Delete
  3. ஒரு நிமிட பைத்தியக்காரத்தனம்...

    வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்...?

    ReplyDelete
    Replies
    1. எந்த வயதிலும் ஆறுதல் தேவைப்படுகிறது.

      Delete
  4. ஹேமா விற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    எந்தவொரு பிரச்சினைக்குமே மரணம் தீர்வல்ல.
    மனம் கணக்கிறது

    ReplyDelete
  5. நெஞ்சம் கனக்கச் செய்யும் கவிதை...

    ReplyDelete
  6. உண்மை சார்.மரணம் தீர்வல்ல எதற்கும்

    ReplyDelete
  7. நெஞ்சம் கனக்க வைக்கும் வரிகள் சகோதரி.. நெஞ்சை கல்லாக்கி சகோதரி அவர்கள் எடுத்த முடிவு அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.. அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்..

    ReplyDelete
  8. கந்து வட்டிக்காரர்களின்
    கடினவார்த்தை
    மானமுள்ளவர்களை
    மரிக்கவைத்துவிடும் .
    அதுவும் பெண்னை.....
    ................................
    தர்றியா வற்றியா
    இப்படிப்பட்ட
    இழிநிலை வந்தபின்
    மானமுள்ளபெண்
    முடியலே .......என்னால்
    அப்பெண்
    முடித்துக்கொண்டாள்

    ReplyDelete
    Replies
    1. வருத்தமான நிகழ்வு

      Delete
  9. டீச்சர் இந்த கவிதை படித்துவிட்டு எங்க சார் தான் படிக்கச்சொன்னார் .இருவருக்குமே கண்கலங்கி விட்டது .பெரிய கொடுமை தான்

    ReplyDelete
    Replies
    1. கடன் என்ற வார்த்தையை கேட்டாலே மனதில் ஓர் அதிர்வு வருகின்றது.நன்றிம்மா

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...