Saturday, 26 October 2013

வீழ்வேன் என்று நினைத்தாயோ!


அவள்
-------------
யாதுமாகி நிற்பவளின்
கூற்றாய்...


தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச் செல்வேன் அனைத்தையும்...

சலசலக்கும் ஓடை
சலியாது வளம் நல்குவேன்
ஆழ்மனக்கடல் நான்
கவலைகளைத் தேக்கி
சுனாமியாய் துன்பங்களை சுருட்டி
சுகங்களையே தருகின்றேன்...

இதமான தென்றல்
இனியவளே அனைவருக்கும்
சுழன்றடிக்கும் சூறாவளி
வீழ்த்த எண்ணும் பகைவருக்கு...

மழைக்கால நெருப்பாய்
மனதிற்கு இதமானவள்
மறந்தும் அணைக்க நினைத்தால்
சுட்டெரிக்கும் சூரியன் நான்...

உயிரினத்திற்கு மட்டுமல்ல
உயிரற்றவைகட்கும்
தோழமை நான்...

புதைத்தாலும்
பூமியில் விதையாய்

அழித்தாலும்
அனலில் தங்கமாய்

சிதைத்தாலும் சித்திரமாய்
மறைத்தாலும்
தமிழ் மறையாய்
வையத்துள் நிலையாய்
நிலை பெற்றிடும் என்னை


வீழ்வேனென்று நினைத்தாயோ...!

8 comments:

  1. நம்பிக்கை தரும் வரிகள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம் சார்.நம்ப முடியாத ஆச்சரியம் சார் .எதிலும் முதல் கருத்து.நன்றி

    ReplyDelete
  3. நம்பிக்கை என்றால் இதுதான்.
    தொடருங்கள் சகோதரியாரே.
    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி சார்

    ReplyDelete
  5. தன்னம்பிக்கை பளிச்சிடும் கருத்தை கவியாய் வடித்த தங்கள் திறம் அருமை சகோதரி. பகிர்வுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்..

    ReplyDelete
  6. வணக்கம் இனிய தோழி!

    வீழ்வேனென நினைத்தாயோ?..

    வீராவேசம் கேட்டு விரைந்தோடி வந்தேனிங்கு
    போராடும் பெண் புலியென உனைக்கண்டேன்!
    வாராது இனிஇடர் வாழ்த்துகிறேன் தோழி!
    பாராழும் எம்மினம் பல்லாண்டு பெருமையோடே!..

    அழகிய வலைத்தளம்! அதைவிட அழகிய உளத்தளம்!
    படைப்புகளும் அருமை!

    இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி.தொடருங்கள்.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...