Wednesday, 25 March 2020

அப்பத்தாவின் கருக்கருவா-விமர்சனம்

அப்பத்தாவின் கருக்கருவா-
கவிதை நூல்-ஆலங்குடி வெள்ளைச்சாமி.
அனிச்சம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


        தொப்புள் கொடியின் பிசிறுகளோடு கதைக்கும் கருக்கருவா விளைவாய் மனதின் அன்பை அறுத்து கொண்டு அப்பத்தாவின் கம்பீரத்தை நம்மிடம் கதைக்கிறது.மரத்தை அண்ணனாக நினைக்கும் மாரியப்பக்கிழவன் சங்க இலக்கியத்தலைவி புன்னை மரத்தை சகோதரியாக எண்ணும் வரலாற்றின் எச்சம்.கலொடிந்த காகமும் கிழவனும் கொண்ட அன்பு மனிதத்தின் உச்சம்.
வீதியில் தொலைந்தவர்களை தேடி அலையும் கவிதையோடு நாமும்  ஒற்றை கால் காகத்தை தேடி அலைகின்றோம்.பூனைக்குட்டியும் நாயும், பேரன்பின் மிகுதியில் கதை கூறும் குழந்தை என மனிதம் ததும்பி வழியும் அமுதசுரபி.
"குடிசையிலிருந்து
விளிம்பில் தொங்குகிறது
உலகத்தின்
கடைசி மழைத்துளி"
இந்தக் கவிதை குருவியை மட்டுமல்ல நமது மனதிலும் தாகத்தை தணித்து நம்பிக்கை விதைக்கும் கவிதை.
மாடுகள் நடத்தும் மாநாடு கவிதை கிராமத்தின் மண்வாசம் நகரத்தின் கானல் வாழ்வைக்காட்டும் படிமம்.அநியாயத்திற்கு எதிராக ஒலிக்கும் குரலற்றவர்களின் குரலாக கவிதைகள் வாழ்கின்றன. காதலில் ஊஞ்சாலாடும் கவிதைகள் இளமையின் வசந்தத்தை வருடி நம்மை சுவாசிக்க வைக்கின்றன.சமூக அக்கறையும், காதலும் கலந்து சமைத்திருக்கும் கவிதைகள் பழக்கூட்டென இனிமை தரும்.என்பது உறுதி.வாழ்த்துகள் கவிஞர், பாடகர் , பட்டிமன்ற பேச்சாளராகத் திகழும் தோழர் வெள்ளைச்சாமி அவர்களுக்கு...படித்து பாருங்கள் மண்வாசம் தகிக்கும்...

4 comments:

  1. படிக்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம் நன்று.

    ReplyDelete
  2. நேற்று தான் நண்பர் மதுவின் பக்கத்தில் இந்நூல் குறித்து படித்தேன். இன்று உங்கள் பதிவு வழி மீள் அறிமுகம்.

    நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. நேர்த்தியான விமர்சனம்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
    நன்றி சகோதரி

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...