Tuesday, 11 April 2017

கக்கூஸ்

கக்கூஸ்-ஆவணப்படம் திரையிடல்

நாள் :15.4.17

இடம் :கந்தர்வன் அரங்கம்

8,அய்யனார்புரம் மூன்றாம் வீதி
புதுக்கோட்டை

குழந்தையின் மலத்தை தாய் கூட சற்று முகம் சுழித்தே அள்ளுவாள் ...

ஆனால் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் நரகலை தனது கைகளால் அள்ளி சுத்தம் செய்பவர்களை எண்ணி பார்க்க நமக்கு எங்கே நேரம் இருக்கின்றது ..

எண்ணிப்பார்க்க கூட தகுதியற்றவர்களாக வாழ்பவர்கள். நமது கழிவுகளைச் சுத்தம் செய்பவர்களை கடவுளுக்கு சமமாக வைத்து பார்க்க வேண்டுமல்லவா ...வராக அவதாரத்தை அவர்களுக்கு முக்கியத்துவம்...கொடுக்கவே எடுத்தாரோ உண்மையாக இருந்தால் ...கடவுள்

எப்போதும் கடந்து செல்லும் குப்பை லாரிகளை கண்டு முகம் சுழித்து .முக்கை பொத்திக்கொண்டு அவசரமாய்க் கடக்கின்றோம் ...ஆனால் அதிலேயே வாழ்பவர்களின் வாழ்வை ஆவணப்படமாக எடுத்து நமது முகத்தின் மீது அறைகின்றார் தோழர் திவ்யபாரதி கக்கூஸ் ஆவணப்படத்தின் மூலம் ...

அம்மா உன் மேல நாறுது நீ எனக்கு ஊட்டாதேம்மா என்று சொல்லும் மகளைப்பெற்ற துப்புரவாளரான தாயின் ஆசையாக ,எம்புள்ளைக்கு ஒரு வாய் சோறு ஊட்டமுடியாத பாவிம்மா நான் என்று கூறுகையில் மனதில் இரத்தம் வடிகின்றது ..

அவர்களது அறியாமையை பயன்படுத்திக்கொண்டு அவர்களை அப்படியே வாழவிட்டிருக்கின்றோம் ..

எது எதற்கோ கண்டுபிடிக்கின்றோம் ....செவ்வாய்க்கு போறோம் ..நிலாவைத்தொடுகின்றோம் ஆனால் மனித மலத்தை அள்ளும் கருவியை கண்டுபிடிக்க வக்கின்றி டிஜிட்டல் இந்தியான்னு சொல்றோம் ...

இந்த வெட்ககேட்டை எங்க போய் சொல்றது ...

அவர்களுக்கு தரவேண்டிய பாதுகாப்பு சாதனங்களில் கூட ஊழல் செய்து அவர்களை நோய்மையாலராக வாழ....விடுவது எந்த விதத்தில் நியாயம் ..

குரலற்ற அவர்களுக்காக குரல் கொடுக்கின்றார் தோழர் திவ்யபாரதி ...

கண் அருவெறுப்பில் மூடுகின்றது ...தொடர்ந்து பார்க்க முடியாமல் குடல் மேலே எழும்புகின்றது ...

ஆனால் அவர்களோடே பயணித்து அவர்களின் நிலையை ஆவணப்படுத்தியுள்ள திவ்யாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..

குறிப்பிட்ட சாதியினரை இதற்காக ஒதுக்கி வைத்து பெருமிதம் கொள்கின்றது இந்து மதம் ..

இத்தகைய அவலத்தை உலகுக்கு பறைசாற்ற அசாத்தியமான துணிச்சல் வேண்டும். பெண் என்பதாலேயே பல வன்முறைகளை தாங்கிக்கொண்டு விடாப்பிடியாக ஆவணப்படுத்தியுள்ளார் ..

புதுகையில் வரும் 15.4.17 கந்தர்வன் நூலகத்தில் மாலை 6 மணி அளவில் " கக்கூஸ்" ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது ..மனசாட்சி உள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் ...
  
அவசியம் வருக


3 comments:

  1. நன்றிம்மா. டிவிடி பிரதிகளும் வந்துவிட்டன. இயன்றவரை அவற்றை விற்று, மேலும் கொண்டுவருவதையும் விற்றுத் தீர்ப்பதே திவ்யா உள்ளிட்ட படக்குழுத் தோழர்களுக்கு நாம் செய்யும் உதவியாகும். திரையிடலின்போது சந்திப்போம்

    ReplyDelete
  2. சந்திப்போம் என்று நினைக்கிறேன்...

    பார்ப்போம்...

    ReplyDelete
  3. அபார துணிச்சல் கொண்ட திவ்யபாரதி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். ஈடு இணையற்ற அவருடய முயற்சிக்கு பாராட்டுகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...