Monday, 10 April 2017

போர்க்குரல் ஒலிக்கின்றது ..

போர்க்குரல் ஒலிக்கின்றது ..

தெருவில் இறங்கி வருமுன் காக்க போர்க்குரல்
எழுப்புகின்றனர் ..குழந்தைகளும் ,பெண்களும் ...அவர்களோடு சில ஆண்கள் மட்டும் ...

மதுக்கடைகளை குடியிருப்பு பகுதியில் திறக்காதே
என்று ...?

எல்லாவற்றிற்கும் கூடும் ஆண்கள் கூட்டம் இதற்கு மட்டும் ஒதுங்குவது ஏன்?

கடையைத் திறந்தால் அடித்து நொறுக்குவோம் என்று அந்தப்பெண் கூறுவது உங்கள் குடும்பத்திற்காகவும் தான் ...

அதிகமான விபத்துகளும்,,அதிகமாக பென்குழந்தைகள் முதல் மூதாட்டிவரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதற்கும்  காரணமாக இருப்பது மதுதான் என்பது அனைவரும் அறிந்த உண்மையல்லவா ?

மதுக்கடை வருமானத்தில் மக்களின் உயிரைப்பறித்து இலவசங்கள் கொடுக்க நினைக்கும் அரசா மக்களைக்காக்கும் ...?

நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்..

நெடுஞ்சாலை மதுக்கடைகள் குடியிருப்புகளில் நுழைவது இன்னும் மோசமான நிலையே உண்டாக்கும் ......

மக்கள் நினைத்தால் மட்டுமே முதலாளித்துவ,சுயநல அரசை ஒழிக்க முடியும் ...

அன்று குழந்தை திருமணத்தால் பெண்குழந்தைகள் லட்சக்கணக்கில் விதவைகளாக இருந்தனர் என்பது வரலாறு ..
 
இன்று மதுவால் பெண்கள் லட்சக்கணக்கில் விதவைகளாக ஆக்கப்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை

பெண்களுக்கு துணை நில்லுங்கள் ..அவர்கள் உங்கள்
சகோதரிகள் தான் ....

3 comments:

  1. குடிப்பது ஆண்கள் மட்டுமே செய்கின்ற தொழிலாக இருப்பதன் விளைவோ? அல்லது, போராடுபவர்கள் போராடட்டும், விளைவை உட்கார்ந்து அனுபவிக்கலாம் என்ற தெளிவோ?

    -இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்

    ReplyDelete
  2. பாதிக்கப்படுவது பெரும்பாலும் அடிமட்ட மக்கள் அவர்களுக்காக யார் குரல் கொடுக்க வருவார்கள் சார்...அலட்சியம் தான் காரணம்...வருகைக்கு மிக்க நன்றி ..

    ReplyDelete
  3. இன்றைய சூழலில்
    மிகவும் அவசியமானப் பதிவு
    நீதி மன்றம் மூலம் கிடைத்திருக்கும்
    இந்த அரிய வாய்ப்பை மக்கள்
    பயன்படுத்திக் கொள்ளவேண்டும்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...