Saturday, 25 March 2017

சின்னவள்-நூல் விமர்சனம்

தாயுமானவனின் "சின்னவள் "கவிஞர் மீரா.செல்வக்குமார் அவர்களின் கவிதை நூல்

காலப்பெருநதியில்...சிறிய காவியமாய் "சின்னவள்" சிரிக்கின்றாள் .

ஒரு அன்பான தந்தைக்கு பாத்திரமான குழந்தை ...தந்தையின் ஸ்பரிசத்தில் உலகை வெல்லத்துடிக்கும்....கவிதையாய் "சின்னவள்"...மகளுக்கே தான் வடித்த உணர்வுகளை நெய்து நூலாக்கி சின்னவளோடு நம்மையும் சிறைப்படுத்தும் வித்தை அருமை..

ஆண்களே மோசம் என்ற குற்றச்சாட்டுகளை பொய்ப்பிக்க சின்னவள் பிறந்துள்ளாள்.



"கூடுகள் கலைவது போல் வீடுகள் கலைவது" அத்தனை எளிதானதில்லை....அது மனங்களால் கட்டப்பட்டிருப்பின் ....ஒவ்வொரு செங்கல்லும் வாழ்க்கையின் வசந்தத்தை ,நோய்மையை காட்சிப்படுத்தும் ....இவரது கவிதையைப்போல ...தற்கால குழந்தைகள் சிரிப்பில் கடப்பது போன்றதல்ல ....கடந்த கால வாழ்க்கை ...கட்டிடச்சிறைக்குள் வாழ்பவர்களுக்கு .....அன்பு வலைக்குள் தேடிப்போய் சிக்கிக்கொள்ளும் உறவுகளின் வலிமையை உணர்த்தும் கவிதை ....

உண்மைதான் குழந்தைகள் நம்மை தேர்வு செய்து பிறக்கின்றனர் ....நாம் தான் அதை உணர மறுக்கின்றோம் ....அலமாரியும் அழும் கலைக்கும் சின்னவளின்றி....நம்மால் தான் பிறந்தார்கள் என்ற ஆணவத்தை அழிக்கும் கவிதையாக
                              "என்னை /அப்பனாய்த்/தேர்ந்தேடுத்த/சின்னவளுக்கு "
ஒவ்வொரு கவிதையும் நாய்க்குட்டியாய் மெல்ல  உரசி தன்னை எழுத சொல்லி தூண்டுகின்றது...

தகிக்கும் பாலை சூட்டில் /திரவ்பதி பாத்திரத்தின்/ஒற்றை பருக்கை என "கண் முன் பருக்கையாய் காட்சியாகும் கவிதை ஆசம் ....

வாவ்! "சனி" இனி இனிக்கும் எல்லோருக்கும் ,கிரீடம் சுமந்து....மகள் திட்டு கூட இனிக்கும் போல  அப்பாக்களுக்கு ....


மதிப்பெண்களை நோக்கி குழந்தைகளை பந்தயக்குதிரைகளாக ஓடவிட்டுக்கொண்டிருக்கும்  சமூகத்தை பரிகசிக்கும் கவிதையாக ,அன்பின் எல்லையாக ..திருத்தொண்டனாகும் அப்பா அருமை ...இப்படி குழந்தைகளை மதிப்பெண்களால் வதைப்போம்என்று தெரிந்திருந்தால் அப்பூதியடிகளை திருநாவுக்கரசர் சந்திக்காமலே சென்றிருப்பார் ..

இப்படியொரு தந்தை இருந்தால் மருதாணியை கவலையின்றி இரு கைகளிலும் வைத்து மகிழ்வார்கள் பெண்குழந்தைகள்...

மகள் தன்னைச்சார்ந்தேஇருக்கவேண்டும் என்ற மீயன்பால் மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொடுக்க மறுக்கும் இவரின் பாசத்தை என்னவென்று சொல்வது .....
அவளின் செயல்கள் அனைத்தையும் ரசிக்கும் கவிதையாய் வாழ்வை அனுபவிக்கும் அப்பாவாக இருப்பதை விட வேறென்ன வரம் வேண்டும் வாழ்வில் ....

நேசிப்பதும்நேசிக்கப்படுவதும் தான் உயிர்ப்புடனான வாழ்க்கைக்கு ஆதாரம்...

தந்தை மகளுக்கிடையே அன்பால் நெய்யப்பட்ட உறவென்பது சொர்க்கம் ..மண்ணில் வந்தது போல ....

இவர் வைத்த அன்பைப் போல ஒவ்வொரு சகோதரனும் வைக்கத் துவங்கினால் அழியாதோ பாலியல் வன்கொடுமை ....

சாரல் வீசும் ஒரு மழை நாளில் சன்னல் அருகே அமர்ந்து ரசிக்க வைக்கும் சில கவிதைகள் ....

திடீரென பெருமழையாய் நனைத்து ஆர்பரிக்கும் சில கவிதைகள் ..குயவனின் கரங்களுக்கு வளைந்து மிளிரும் மண்சிற்பமாக சில கவிதைகள் ..

நமக்கு வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்கின்றாள் "சின்னவள்"

இப்படி பொங்கி எழும் அன்பை காட்ட முடியாமல் குழந்தைகளை விடுதியில் வளர்ப்பவர்கள் ....பிற்காலத்தில்முதியோர்இல்லம்போக தங்கள் மனதை தயார்செய்துகொள்ளவே வேண்டும் ....

தனது முதல் கவிதைநூலை...முத்தை சுமக்கும் சிப்பியென சுமந்து ...தகுந்த காலத்தில் வெளியிட்டிருக்கும் கவிஞருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ...



...

4 comments:

  1. நல்லதோர் அறிமுகம் சகோ
    தம

    ReplyDelete
  2. நல்லதொரு விமர்சனம். பாராட்டுகள் - உங்களுக்கும் நண்பர் செல்வாவிற்கும்.....

    ReplyDelete
  3. கவிஞர் மீரா செல்வகுமார் அவர்கள் இன்னும் பல கவிதை நூல்கள் படைத்திட வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அறிமுகமும் விமர்சனமும் நன்றாக இருக்கிறது . இன்னும் பல படைத்திட வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...