Monday, 20 February 2017

பெண்ணாய் பிறக்க என்ன கொடுமை செய்தோம்?

இன்னும் எத்தனை நாள்
இந்த கொடுமைகள் நீடிக்கும்.

அண்ணாக்களும், அப்பன்களும்
உறவு மறந்த ஆண்களும்
உள்ளம் சிதைந்த மிருகங்களும்
வளரும் மார்பைக் கசக்கும் கொடுமை
வலிக்கும் வலியை யாரிடம் கூற..

உங்களால் குதறப்பட்டு குருதி வழியும்
உயிர் பிடுங்கும் வலியோடு,
எங்கள் யோனி சிதைக்கும் உரிமை
யார் தந்தார்?

உயிர் கொடுத்து, உயிர் வலிக்க
உயிர் படைக்கும் சக்தி நாங்கள்...

வெறி பிடித்த மிருகத்தின்
முகமூடியறியாமல்
வக்கிரமாய்ச் சாகின்றோம்...

நித்தம் நித்தம் வக்கிரங்களின் ஓலங்கள்
நித்திரையிலும் பயந்து அலறுகின்றோம்.

மெல்ல மலரும் மொட்டுகள்
மேனி கருகி எரிகின்றோம்...

என்ன செய்வதென விழிக்காதீர்
கொடுங்கோலனின் குறி அறுத்து
கொடுமை செய்யும் எண்ணம் அழிப்பீர்...

உங்கள் வீட்டுக்குழந்தை
உயிர் விடாமல் தடுப்பீர்..
 
ஏழாம் வகுப்பு படித்த ஹாசினி


மூன்று வயது நிரம்பிய ரித்திகா


5 comments:

  1. மனது பதறுகிறது......

    கடுமையான தண்டனைகள் மட்டுமே வழி. பெற்றோர்களின் வழிகாட்டுதலும் தேவை.....

    ReplyDelete
  2. துயரம் பகிரும் வரி கண்டு
    பலரும் எண்ணிப் பார்க்க வைக்கிறது
    காலம் பதில் தருமே!

    ReplyDelete
  3. விழிகளை நனைக்கும் பதிவு தோழி.
    விடியல் எப்போது என்றே காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  4. “நித்தம் நித்தம் வக்கிரங்களின் ஓலங்கள்
    நித்திரையிலும் பயந்து அலறுகின்றோம்”
    வலி மிகுந்த வரிகள். ஆண் குழந்தைகளின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நன்றி கீதா!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...