Sunday, 22 January 2017

பெரியாரின் விதைகள் முளைத்து விட்டதைக்காண்கிறேன்...

பெரியாரின் விதைகள் முளைத்து விட்டதைக்காண்கிறேன்...

தமிழன் உணர்வுள்ளவனாக,சுயமரியாதை உள்ளவனாக,தன்மானச்சிங்கமாக,சாதி ,இன,மத பேதமற்று ஒன்றிணைய ஆசைப்பட்ட தொண்டுக்கிழவனின் கனவுகள் இன்று தமிழகமெங்கும் நனவாகத்தொடங்கியுள்ளன...

ஆங்காங்கே சில துரோகிகள் முளைக்கலாம்..ஆனால் அவர்கள் இன்னும் ஒற்றுமையையே ,ஆவேசத்தையே,வளர்க்கின்றார்கள்.

தங்களைத்தாங்களே அடையாளப்படுத்தி தமிழினத்துரோகிகள் நாங்கள் என உலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டுகின்றனர்.

இதற்கெல்லாம் அச்சப்பட..அவர்கள் முனைமழுங்கி வேடிக்கைப்பார்க்கும் இலவசத்திற்கு மயங்கிய பிச்சைக்காரர் கூட்டமல்ல..

அக்னிக்குஞ்சுகள்..அமைதியாய் போரிடுகின்றன...

ஏமாற்றமுடியாத தெளிவில் உள்ளதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்...


வெல்க...வெல்க மாணவர்கள் ஒற்றுமை..

6 comments:

  1. மாணவர் ஒற்றுமை வெல்லும்

    ReplyDelete
  2. பெரியார் விதையா .?. ஆதலால் தான் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்களோ ?. ஜல்லிக்கட்டு, சாமிக்கு மாடு , அதன் மூலம் கன்று - கிட்டத்தட்ட எல்லா தரப்பு மக்களையும் குவித்து குலம் , பெருமை , பாரம்பரியம் என யோசிக்க வைத்து விட்டார்கள் ( அந்த பீட்டாவுக்கு நன்றி) ...இனி மக்களிடம் உள்ள அறிவு அதை எடுத்த்து செல்லும். குறிக்கோளும் , லட்சியமும் இல்லாத மனிதர்களிடம் அதை புகட்டாகிவிட்டது ( எல்லாரும் இல்லை ..பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் ) . பக்தி இனி வழி நடத்தும்.

    ReplyDelete
  3. நிச்சயமாக சகோ. சமீப காலங்களாக தமிழர்கள் முற்றிலும் உணர்ச்சியற்ற கூட்டமா மாறி விட்டார்களோ என்று வருத்தம் கொள்வதுண்டு. இந்த ஜல்லிக்கட்டு தடை மீதான இளைஞர்களின் போராட்டத்தை காணும் போது, தமிழர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலை உணர்ந்து விட்டார்கள் என்பதும், தங்கள் பண்பாட்டை அழிய விடாமல் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவார்கள் என்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது.

    ReplyDelete
  4. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
    தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

    ReplyDelete
  5. வெல்லும் ஆதாங்கமும் கூடவே தோன்றுகிறது

    ReplyDelete
  6. ஒற்றுமைக்கு இது ஒரு உன்னத சான்று...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...