Friday, 20 January 2017

வெற்றி அவர்களுக்கே..


தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு....உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு வீர வணக்கம்..

அலைஅலையாக மக்கள் கூட்டம் அவர்கள் பின்னே ஒன்றிணைய...பொறுமையாக இருங்கள் என வழிநடத்திக்கொண்டிருக்கும் மாணவர்களை எண்ணி பெருமையாக உள்ளது...

தங்களது குறிக்கோளை நோக்கி நிதானமாக போராட்டத்தை வடிவமைத்து..அரசையே உலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்..

தமிழர் உரிமைக்கு போராடுகிறோம் என அரசியல் செய்யும் போலிகளுக்கு மத்தியில் உண்மையான உணர்வோடு போராடும் தமிழ் இளைஞர்கள்...

புதுக்கோட்டையில் 3 வது நாளாக போராட்டம் மிகச்சிறப்பாக நடந்துகொண்டுள்ளது...
கொஞ்சநேரமாவது அவர்களோடு அமர்ந்து விட்டு போகனும் என்ற ஆவலோடு மக்கள் வந்து கலந்துகொண்டு அவர்கள் வெற்றியடைய வாழ்த்து சொல்லி செல்கின்றனர்..

அவர்களின் ஒற்றுமை மேலும் சிறக்கட்டும் ...

வெற்றி அவர்களுக்கின்றி வேறு யாருக்கு வரும்...?!

6 comments:

  1. குழந்தைகளோடு ஓர் குழந்தையாகத் தாங்களும் .... சபாஷ் !!!!!

    வெற்றி அவர்களுக்கே .. உங்களுடன் கூடவே.

    ReplyDelete
  2. அருமை அம்மா....

    அனைவரிடத்திலும் உள்ள போராட்ட குணம் இப்பொழுதுதான் வெளிப்பட ஆரம்பித்துள்ளது...


    .. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அரசியலில் இறங்காது
    தமிழனின் முதலீடான
    கல்வியை மேம்படுத்தியவாறு
    ஒழுக்கம், பண்பாடு பேணி
    எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
    எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
    மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
    எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

    ReplyDelete
  4. உண்மைதான் இதனை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...