Wednesday, 18 January 2017

சல்லிக்கட்டு...

உங்களை சிரம் தாழ்ந்து வணங்குகின்றோம்...இளைஞர்களே..

அத்தனை பெண்களும் உங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாய் இருக்கும் போது மனம் நெகிழ்வாய் ,பெருமையாய் இருக்கின்றது என் பிள்ளைகளே..

இத்தனை பண்பாடும் ஊறிய குருதியில் ...பெண்ணினம் அச்சமின்றி போராடுவதை நினைக்கையில் ...பெருமிதப்படுகின்றேன்...

உங்களின் நோக்கம் தெளிவாய்...குறிக்கோளை நோக்கி பயணிக்கும் உங்களை பார்த்து விஷமிகள் அச்சத்தோடு அமைதி காப்பதை எண்ணி உள்ளம் மகிழ்கின்றது..

கலாமின் குழந்தைகளே உங்களை இனி யாரும் ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது என நிரூபித்து விட்டீர்கள்..

சூடு சுரணையற்ற மாக்களின் மத்தியில் சுடர் விளக்காய் காண்கையில் எதிர்காலம் நம்பிக்கை ஒளியை பாய்ச்சுகின்றது..

எதையும் எதிர்பார்க்காது...யாருக்கும் அடிபணியாது ...
எதிர்த்து போராடும் வல்லமையாளர்களே உங்கள் போராட்டம் வெல்லட்டும்...

இத்தனை ஆண்டுகளாய் சுரண்டி வாழ்ந்த கூட்டம் ...திரும்பி பார்க்காது ஓடட்டும்...

பெண்கள் சுயநலமானவர்கள் என்ற கருத்தை உடைத்து போராட்டக்களத்தில் நிற்கும் வீராங்கனைகளே..
நாளை உங்களோடு உங்களின் பெற்றோர்களும் களமிறங்குவார்கள்....

வேஷதாரிகளின் வேடம் கலையும் நாள் வந்து விட்டது..
உங்களை குறை சொல்லியே வாழும் கூட்டம் தலைகவிழ்ந்து நிற்கின்றது..

வாழ்த்துகள் குழந்தைகளே...

6 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் குழந்தைகளே

    ReplyDelete
  3. //பெண்கள் சுயநலமானவர்கள் என்ற கருத்தை உடைத்து போராட்டக்களத்தில் நிற்கும் வீராங்கனைகளே..
    நாளை உங்களோடு உங்களின் பெற்றோர்களும் களமிறங்குவார்கள்....//
    ஜல்லிக்கட்டுகாக!பெற்றோர்களும் வேறு வேண்டுமா?

    ReplyDelete
  4. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
    தீர்வு கிட்டும் வரை
    எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

    காலம் பதில் சொல்லுமே!

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...