Wednesday, 11 January 2017

தமிழர் திருநாள்

என்று மாறும் இந்த இழிநிலை

அன்று
அறுவடை மகிழ்வில்
ஆராதித்து கொண்டாடிய
தமிழர் திருநாள்..

இன்று
வாடிய பயிர்களுக்காக..
ஆசையாய் வளர்த்த காளையுடன்
விளையாடுவதற்காக...
போராடுகின்ற விழா.
வருடந்தோறும்...

சுதந்திர இந்தியாவில்
நன்றி கூறும் விழாவிற்காக
போராடுகிறாய்..தமிழா...
தமிழினம் இணையும் காலம்
விரைந்து வரட்டும்...

தேவை
கொஞ்சம் உப்பு
கொஞ்சம் சூடு..

3 comments:

  1. உண்மை சூடு, சொரணை குறைந்து விட்டது

    ReplyDelete
  2. நிறைய உப்பு...!
    கொஞ்சம் சூடு...?

    ReplyDelete
  3. நல்ல கவிதை. ஆதங்கம் தான்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...