Friday, 9 December 2016

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும்

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.

நாள்:18.12.16
இடம் :மௌண்ட் சியோன் பொறியியல் கல்லூரி புதுக்கோட்டை.
காலம் :காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.


கணினியில் தமிழில் புரட்சி ஏற்படுத்த இரண்டு வருடங்களுக்கு முன் தற்போது கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் ஆசிரியர்களுக்கு கணினித்தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டது...அப்போது அளித்த பயிற்சியினால் புதுகை வலைப்பதிவர்கள் தங்கள் வலைப்பூவை சிறந்த முறையில் அமைத்து தங்களது படைப்புகளை அளித்து வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டில் சிறப்பானதொரு வலைப்பதிவர்கள் சந்திப்பையும் மாநாடு போல நடத்தி மகிழ்ந்தோம்.

மீண்டும் அவர்களுக்கு மேற்பயிற்சியும்,புதிய வலைப்பதிவர்களை உருவாக்கும் நோக்கில் வருகின்ற 18.12.16 ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டை மௌண்ட்சியோன் பொறியியல் கல்லூரியில் ஒருநாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சிகள்
1]வலைப்பக்கம் தொடங்குவதற்கான பயிற்சி
[உருவாக்கமும் விரிவாக்கமும்]

2]விக்கிபீடியாவில் எழுதுவதற்கான பயிற்சி.

3]யூட்டியூபில் ஒலி-ஒளி ஏற்றுவது குறித்த பயிற்சி.

4]அலைபேசியில் உள்ள ஆப்ஸ்களை பயன்படுத்துவது குறித்த பயிற்சி.

என நான்கு கட்டங்களாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிகழ்வை தலைமை தாங்கி தொடங்கி வைக்க கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும்,புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்க நிறுவனருமான முனைவர் அருள்முருகன் அவர்கள் இசைந்துள்ளார்கள்.

பயிற்சி ஆசிரியர்கள்

1]திருமிகு சிவ.தினகரன் .தமிழ் இணையக்கல்விக்கழகம் .சென்னை.
2]முனைவர்.மு.பழனியப்பன் .தேவக்கோட்டை.
3]வலைச்சித்தர் .திண்டுக்கல் தனபாலன்.
4]திருமிகு பிரின்ஸ் என்ராசு பெரியார்.விக்கிபீடியா சென்னை.
5]முனைவர் .ஜம்புலிங்கம் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சை.
6]திருமிகு.ரமேஷ்.டி.கோடி.codess tec.binders.Trichy.
7]திருமிகு அதிபதி,திருமிகு உதயக்குமார்.kl.ins skill dev.pudukkottai.

மற்றும் புதுகை வலைச்சித்தர்கள் வழங்க உள்ளனர்.

75 பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்பட உள்ளது.முன்னதாகப்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே என்பதால் விருப்பமுள்ளவர்கள் தங்கள்
பெயர்
ஆண்/பெண்
மின்னஞ்சல்
வலைப்பூ முகவரி [இருந்தால்]
அலைபேசி
தங்களைப்பற்றிய சுருக்கம்
ஆகியவற்றை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
muthunilavanpdk@gmail.com

தொடர்பு கொள்ள

திருமிகு நா.முத்துநிலவன்
ஒருங்கிணைப்பாளர்.
கணினித்தமிழ்ச்சங்கம்.புதுக்கோட்டை.
அலைபேசி.9443193293.



3 comments:

  1. 18 டிசம்பர் 2016 அன்று பயிற்சியில் கலந்துகொள்வேன். விக்கிபீடியாவில் எனது அனுபவத்தைப் பகிர வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றியும்.

    ReplyDelete
  2. அருமைம்மா. வழக்கம்போல முதல் பகிர்வும், அழகுப்படங்களுடன் உங்கள் பாணியில் எழுதியதும் அருமை. அப்படியே புகழ்பெற்ற உங்கள் முகநூலிலும் போட்டுவிடுங்கள். (நாந்தான் முகநூல்பக்கம் ரொம்பப் பழகுறதில்லையில்ல..)

    ReplyDelete
  3. சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...