Sunday, 4 December 2016

புத்தகதிருவிழா 4.12.16

புதுகை புத்த்கத்திருவிழா இனிதே நிறைவுற்றது..

எதிர்பார்த்ததை விட அதிக அளவு மக்கள்..குடும்பத்துடன் குழந்தைகளுடன் கலந்து கொண்டதைப்பார்க்கையில் மனதிற்கு மகிழ்வாக நிறைவாக இருந்தது..

திருமிகு பஷீர் அலி சகோவின் நாணயங்கள் கண்காட்சி விழாவிற்கு மேலும் மெருகூட்டியது..

எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமாரின் உரை அத்துணை சிறப்பு.தேவையான ,மனதை விழிக்க வைக்கும் பேச்சு.
”குரங்கிலிருந்து மனிதனை பிரித்து காட்டுவது புத்தகங்களே அதை படிப்பவர்களே உயிருள்ளவர்கள்.”.என்ற அவரின் பேச்சு அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று.

விழாவில் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கியுள்ளனர்.
குலபதி பாலையா பள்ளி மாணவர்கள் எனது ஒரு கோப்பை மனிதம் நூலை வாங்கிக்கொண்டு இருந்தனர்...என்னை பார்த்ததும்  ,படிச்சு பார்த்தோம்மா நல்லா எழுதியிருக்கீங்கன்னு சொன்ன போது ...மனம் சொல்ல முடியாத உணர்வில்..

முகநூல் தோழமைகள்,பயிற்சிக்கு வந்திருந்த பிற மாவட்ட ஆசிரியர்கள்..என நிறைய தோழமைகளைக்காண முடிந்ததில் பெருமகிழ்வு..

காரைக்குடி Thendral Saai Nandavanam Chandrasekaran இன்னும் பலர் மகிழ்வாக இருந்தது...தோழமைகளைக்காணும் போது..கரந்தை அண்ணா வந்தது தெரிந்தால் பார்த்திருக்கலாம்..

பத்துநாட்கள் போனதே தெரியவில்லை..

புத்தகத்திருவிழாவை வெற்றிகரமாக ,நேர்த்தியாக,திட்டமிடலுடன்,மிகச்சிறப்பாக நடத்தி முடித்த [இவரால் மட்டும் தான் இத்தனை சிறப்பாக நடத்தமுடியும்] கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் ,பாராட்டுகளும்..






















2 comments:

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...