Tuesday, 9 August 2016

எழுந்தாள் ஷர்மிளா

இத்தனை ஆண்டு பசி தீயும்
அக்னியாய் சுட.

இத்தனை ஆண்டு மௌனமும்
ஆர்ப்பரிப்பாய் எழ. 

இத்தனை ஆண்டு அமைதியும்
புயலெனச்சீற.

 பதினாறாண்டு போராட்டம்
சட்டத்தை பிடுங்கவே ...

அதிகாரம் இட்ட...
அதிகாரத்தை நீக்க..

 அழிவிற்கு எதிராய்
அதிகாரம் செய்யவே
அதி காரமாய் முடிவெடுத்த
 ஆதியான சகோதரி.....

 இரோம் ஷர்மிளா வெற்றி அடைய வாழ்த்துகள்

5 comments:

  1. அவர் எடுத்த தெளிவான முடிவுக்கு பாராட்டப்படவேண்டும். நாம் வாழும் காலத்தில் நாம் காணும் இரும்புப்பெண்மணி.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்,,,/

    ReplyDelete
  3. இரும்புப் பெண்மணி...
    அருமை... அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  4. மகிழ்ச்சி...தீர்க்கமான முடிவு...

    ReplyDelete
  5. இரும்புப்பெண்மணி,,,/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...