Wednesday, 3 August 2016

அவள் இந்துவா ?-

அவள் இந்துவா ?-
 கலைச்செல்வி நீ
கிறித்தவராகப்பிறந்திருக்கலாம்.
இஸ்லாமியச்சகோதரியாக மலர்ந்திருக்கலாம்..
கொஞ்சமாவது எதிர்ப்புக்குரல் இருந்திருக்கும்.
 இந்துவாகப்பிறந்த பலன்...
 வெறிப்பிடித்த இரண்டு மிருகங்கள்
 உன்னை கிழித்தெறிந்து விட்டன...

யாரும் உனக்காக வருந்தமாட்டார்கள்..
ஏன்னா நீ ஸ்வாதி இல்லம்மா?

 யோனி கிழிகையில்
உயிர்வலியை தாங்கியது எப்படி?
முகம் சிதைகையில்
இந்தியாவில் பிறந்தோமே என வெட்கித்தாயோ?
 உடல் கருகிட 
மனம் பதறிட போய்விட்டாய் நீ
கலைச்செல்விகள்
இன்னும் இருக்கின்றனர்....தொடர்கதையாக....

8 comments:

  1. மனம் கணக்கின்றது...

    ReplyDelete
  2. சீ ,புண்ணிய பாரதமென்கிறார்களே! நாம் எங்கே போகிறோம்?

    ReplyDelete
  3. மன்னிக்க வேண்டும் கவிஞரே! இது தவறான புரிதல். நக்கும் நாய்கள் இந்துவா, இசுலாமியரா, கிறித்துவரா என்று பார்ப்பதில்லை.
    நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன?
    எதிர்ப்புக் குரல் எழாததாலேயே(?) இவர் வேறுமதத்தில் பிறந்திருக்கலாம் என்னும் கருத்து சரியாகிவிட முடியாது. அன்புகூர்ந்து சிந்தியுங்கள்.

    ReplyDelete
  4. மிகவும் வேதனை.

    ReplyDelete
  5. மனம் வேதனை அடைகிறது ...இது போன்ற நிகழ்வுகளால்..

    ReplyDelete
  6. உலகம் சிலரால் கற்கால மாக மாறி வருகிறது!

    ReplyDelete
  7. வேதனையான நிகழ்வு!

    ReplyDelete
  8. //மன்னிக்க வேண்டும் கவிஞரே! இது தவறான புரிதல். நக்கும் நாய்கள் இந்துவா, இசுலாமியரா, கிறித்துவரா என்று பார்ப்பதில்லை. //

    இதே சிந்தனை தான் எனக்கும் வந்தது.

    வேதனை தரும் நிகழ்வு. தினம் தினம் இப்படி ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் தொடர்வது வருத்தமானது.... எப்போது விடிவுகாலம்.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...