Wednesday, 3 August 2016

அம்மா எனக்கு போர்டு தெரியல முன்னாடி உட்கார்ந்துக்கவா?

அம்மா எனக்கு போர்டு தெரியல முன்னாடி உட்கார்ந்துக்கவா?

 ஆறாம் வகுப்பில் துறுதுறுன்னு சேட்டைகளாக...எந்தவித அச்சமும் அற்றவர்களாக வந்து சேர்ந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியென பறந்துகொண்டிருந்த குழந்தைகளில் ஒன்றுதான் இப்படி கேட்டது...சரிடான்னு சொல்லி உட்கார்ந்துக்கோ என்றேன்...

 தட்டுத்தடுமாறி நடந்து வந்த குழந்தையைப்பார்த்ததும் அதிர்ச்சியாகி என்னடா ஆச்சு என்றபோது பிறக்கும் போதே அப்படித்தான்மா என்றாள். 5%க்கும் குறைவான பார்வைத்திறன் கண்களுக்கு அருகில் புத்தகத்தை வெளிச்சம் படும் இடத்தில் அமர்ந்து கொண்டு அந்தக்குழந்தை படிக்க சிரமப்படுவதைகாண்கையில் தினம் தினம் மனம் வலிக்கவே செய்கின்றது. 

ஆனால் அவளுக்கு பழகி விட்டது எப்போது புன்சிரிப்புடன் மெல்லியக்குரலில் பேசுவாள்..நன்கு படிக்கும் குழந்தை ஒருமுறை அவள் அம்மா வந்தபோது ஏன் இப்படி என்றேன் நெருங்கிய உறவில் திருமணம் செய்தது தான் காரணம் என்று கவலையுடன் கூறி இவளுக்கு ஒரு அண்ணன் இஞ்சினியரிங் படிக்கிறான் மா...அவனுக்கும் இதே பாதிப்பு இருக்கும்மா... நடுவில் பிறந்த ஒரு பெண்குழந்தை மட்டும் தப்பித்து விட்டாள்... .

அண்மையில் புதுகையில் நடைபெற்ற கம்பன்விழாவில் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பு பரிசை பெற்றுள்ளாள்.

 அடுத்த ஹெலன்கெல்லர் நீதாண்டா என்பேன்.

சஸ்ரினா பிர்தௌஸ் வளர உங்களின் வாழ்த்துகளும் உதவட்டும்.

 கம்பன் கழகத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி.

2 comments:

  1. அரிமா, ரோட்டரி உதவியுடன் கண்மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்று பார்க்கலாமே? கல்வித்துறையின் உதவியும் கிடைக்க ஏற்பாடு செய்யலாம். உங்கள் அன்பில் அவளுக்குக் கண்கிடைக்கட்டும்.

    ReplyDelete
  2. வருத்தம் தந்த பகிர்வு. சிகிச்சை எடுத்துக் கொண்டு விரைவில் சரியாகட்டும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...