Wednesday, 1 June 2016

ஆங்கில வழிக்கல்வியில் விட பயமாருக்கு...

ஆங்கில வழிக்கல்வியில் விட பயமாருக்கு...

காலையில் அக்கா மகளிடம் பேசினேன்...தன் மகளை அருகில் உள்ள அரசுப்பள்ளியில் விடப்போறேன் சித்தி, ஆங்கில வழியில் விட பயமாருக்கு..குழந்தைய படி படின்னு அதன் இயல்பையே மாத்திடுவாங்கல்ல...

அரசுப்பள்ளின்னா அன்பா பார்த்துப்பாங்கன்னு அவங்க அப்பா அங்கு தான் சேர்க்கனும்னு சொல்றாங்க...

 மருமகன் மாநில அரசின் சென்னை செண்ட்ரல் பாலிடெக்னிக்கில் ஆசிரியராகப்பணி புரிந்து வருகின்றார். சத்தமின்றி நிறைய சேவை புரிந்து வருகின்றார்.கவிஞர் வைகறைக்கு ரூ 5000 அனுப்பி உள்ளார். உதவி செய்ய பணத்தை விட மனம் முக்கியம்..

 பக்கத்துல எல்லோரும் இங்கிலீசு மீடியத்துல சேர்க்க சொல்றாங்க..ஆனா நாங்க அரசுப்பள்ளில தான் சேர்க்க போறோம்னு தெளிவா சொன்னா..

 இந்த தெளிவு அம்மாவான என்னிடம் இல்லயே வருத்தப்பட்டேன்.. ஆனா ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரா பெருமைப்பட்டேன்.

முதன்முதலாக பள்ளியில் அடியெடுத்து வைக்கும் குட்டிமாக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்...

4 comments:

  1. சிந்திப்போம்

    ReplyDelete
  2. பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். கண்ணில் நம்பிக்கை ஒளி வீசும் பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்களுடைய அக்கா மகளுக்கு எனது பாராட்டுகள்.

    ReplyDelete
  4. சிறுமிக்கும் அவள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...