Monday, 30 May 2016

அண்ணே எப்படின்னே வட்டம் போட்டீங்க?

அண்ணே எப்படின்னே வட்டம் போட்டீங்க?


பொறியியலில் தங்கமெடல் வாங்கிய மகள் கலைநிலாவின் கேள்விக்கு வடிவேல் ஆசாரி திரும்பி பார்த்து ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்து தொடர்ந்து தன் வேலையைப்பார்த்துக் கொண்டே....
காம்பஸ் இல்லன்னா எனக்கு வட்டம் போடவே வராதுன்னு சொல்லிகிட்டே அவர் கையில் என்ன கருவி வச்சிருக்கார்னு தேடினாள்.

அவருக்கு தான் பொறியியல் பட்டம் கொடுத்திருக்கனும் நியாயமா பார்க்க போனா...
பள்ளிக்கூடமே போகாம அத்தனை கனக்கச்சிதமாக அலமாரி தயார் செய்ததை பார்த்த போது ,சே என்ன படிப்புடா இதுன்னு வெறுப்பு தான் வந்தது.

கண்கள் வியப்பில் விரிய ,அவள் அவரின் கை வேலைப்பாட்டை பார்த்து அதிசயித்துக்கொண்டிருந்தாள்.
எப்போதும் மேமாத விடுமுறை வெளியூரிலேயே அதிகம் கழியும் ...சொல்லப்போனால் இந்த மே மாதம் தான் முழுக்க முழுக்க வீட்டுப்பணியிலேயே சென்றது..

கரையான் அரித்த ஷோ கேஸை சரி செய்யத்தான் ஆசாரியை அழைத்தது ..ஆனால் அது புத்தக அலமாரி செய்ய இன்னும் சில வேலைகளை செய்ய வைத்து விட்டது.

4 ஆம் தேதி தொடங்கிய வேலை இன்னும் முடியவில்லை.90%நிறைவடைந்துள்ள நிலையில் வங்கித்தேர்வு எழுதுவதற்காக தயார் செய்து கொண்டிருந்த மகள் கலைநிலா ,அவ்வவ்போது வடிவேல் ஆசாரியையும், அவருக்கு துணை செய்யும் அழகு என்ற பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞனின் திறமையையும் கண்டு வியந்து கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு நடுவில் அத்தனை பொருட்களும் கொட்டிக் கிடக்க, குட்டி வாண்டுக்கு ஏக கொண்டாட்டம்..அத்தனையையும் அவ்வளவு ஆர்வமாய் வேக வேகமாய் கலைத்து போட்டு,பிடிக்க வந்தால் ஒரே ஓட்டமாய் ஓடினாள்.


ஒரு வழியாக வேலை நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது...

நாளை மறுநாள் பள்ளிகூடம் போகனும்....

ஆசிரியராக பணியில் சேர்ந்து 28 வருடங்கள் முடிந்து 29 ஆவது கல்வியாண்டு துவங்குகிறது.
ஆனாலும் இன்னமும் தொடரும் பழக்கமாய்

பள்ளித்துவங்கும் முதல் நாளில் , புது பேக்,புது பேனா,புது நோட்டு,புது டிபன்பாக்ஸ்,புது சேலை,புது செருப்புன்னு தயாராகிக்கொண்டு உள்ளேன்.இப்பதான் முதன்முதலாய் பணிக்கு செல்வது போல ஒவ்வோர் ஆண்டும் இதே கதை தான்.ஆனாலும் மாறப்போவதில்லை..இந்த குணம் தான் என்னை இன்னும் மாணவியாகவே வைத்திருக்க காரணமாக இருக்கலாம்..

புது மாணவர்களை சந்திக்க, நானும் புதுசா போனும் தானே.
முகநூலிலும் இனி தினமும்......

7 comments:

  1. வாழ்த்துகள் சகோ.... மேலும் பல மாணவர்களை சிறப்பான தகுதிகளோடு உருவாக்க உங்களுக்கு எனது வாழ்த்துகள்.....

    ReplyDelete
  2. //புது மாணவர்களை சந்திக்க, நானும் புதுசா போனும் தானே//

    ரொம்ப சரி.

    ReplyDelete
  3. இன்னும் மாணவி என்ற எண்ணம். இதுவே உங்களின் உயர்வுக்குக் காரணம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஒவ்வொரு வருடமும் முதல் நாள் அன்று
    புது உடையில் செல்வதை நானும் பல்லாண்டுகளாக பழக்கமாகவே வைத்துள்ளேன்
    இக்கல்வியாண்டு சிறப்புடன் செல்லட்டும்

    ReplyDelete
  5. 29வது வருட கல்வி பணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் கீதா... இந்தக் கல்வியாண்டு சிறப்பாக அமையட்டும்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...