Sunday, 6 March 2016

5.03.16 ஆரோவில் கிட்ஸ் புதுகை நர்சரி பள்ளி ஆண்டு விழா ...

5.03.16 ஆரோவில் கிட்ஸ் புதுகை நர்சரி பள்ளி ஆண்டு விழா ...

இன்று அப்பள்ளி விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போது,திருமிகு அல்லிராணி அவர்களுடன் பழகும் வாய்ப்புக்கிட்டியது.இருவரும் குழந்தைகளின் குறும்புகளை ரசித்து மகிழ்ந்தோம்.


தேவதைகள் போன்ற குழந்தைகள் அலங்கரிப்பில் கண்ணை பறித்தார்கள்.

குழந்தைகளே அனைவரையும் மழலை மொழியால் வரவேற்று,நிகழ்ச்சியை நடத்திய போது அப்பள்ளியின் தாளாளர் திருமிகு வசந்த மீனாவை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் மேடையில் பேசுவதைக்கண்டு பெற்றோர்களில் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வராத குறைதான்.

மனதை நிறைத்தன குழந்தைகளின் நடனங்கள்...

குழந்தைகள் சிறப்பாக ஆட வேண்டும் என்ற கவலையில் கீழிருந்து ஆசிரியர்கள் ஆடியது மறக்க முடியாத ஒன்றாக...

இன்று பூக்கள் நிறைந்த சோலையில் இருந்த நிறைவு...

இவ்வாய்ப்பைக்கொடுத்த சகோதரர் டீலக்ஸ் ஸ்டுடியோ சேகர் மற்றும் சகோதரி வசந்த மீனாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றியும்.










4 comments:

  1. அழகு குட்டிகளின் அணிவகுப்பு அருமை வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. குழந்தைகள் என்றாலே இன்பம்தான். அந்தக் குழந்தைகளின் நிகழ்வில் நீங்கள் பங்கெடுத்துவிட்டு வந்திருப்பது மேலும் இன்பம் அளித்திருக்கும் இல்லையா சகோ. அழகு குழந்தைகள்! எல்லா குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. அழகிய படங்கள்..... இனிமையான நினைவுகள்.

    ReplyDelete
  4. மங்காத ப்ரகாசம் மழலைகள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...