Sunday, 3 January 2016

வரமாய்

முகத்தை திருப்பிக்கொண்டும்
குப்புறப்படுத்துக்கொண்டும்
விழுந்த இடத்திலிருந்து எழாமலும்
அடம் பிடித்து ஓங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன
அஃறிணைகள்.....

அவளின் மழலைகள்....
அவளைக்காணாது
திகைத்து தவித்து தடுமாறி
அலைகின்றன...

உள் நுழைந்த தென்றலோ
அவசரமாய் வெளியேறுகிறது...

விழிவிரித்து, உதடு சுழித்து
மனதைக்கொள்ளைக்கொண்டவளின்
டாட்டாவை பத்திரமாக வைத்துள்ளேன்
வரமாய்...





15 comments:

  1. மழலையின் மகிழ்விற்க ஈடு ஏது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா.

      Delete
  2. சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  3. Replies
    1. அனுபவம் தான் கவிதையாக சகோ..நன்றி..

      Delete
  4. அருமையான கவிதை அக்கா...

    ReplyDelete
  5. எளிமை அதிலும் மிக இனிமை!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மிக்க நன்றி அய்யா.தங்களின் பாராட்டு மேலும் எழுதத்தூண்டுகின்றது அய்யா..

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...