Friday, 6 November 2015

sinna kannamma-சின்னக்கண்ணம்மா

 

களம் புகுந்த யானையாய்
கலைத்து போட்டவளின்
கற்பனைகளை கதைத்துக்கொண்டுள்ளன
கவிழ்ந்து கிடக்கும் பொம்மைகள் ..

அடுக்கி வைத்தவைகளை
அத்தனை மெனக்கிடலுடன்
சிரத்தையாய் கலைப்பவளை
ரசிக்காமல் திட்டமுடியவில்லை

செய்கின்ற தவறுகளையெல்லாம்
இதழ்விரித்தே சமன் செய்திடுவாள்
கரடியும் சோட்டாபீமும் வாத்துக்குட்டியும்
இவளின் அன்பில் மூழ்கித்திளைக்கும்...

குயிலுக்கு டாட்டா காட்டுபவளுக்கு
பதிலுக்கு டாட்டா சொல்லும் குயில்

ரயிலென சுமந்துசெல்ல
அவளிடம் அணுகும் அட்டைப்பூச்சி
வேகமாய் அவளைக்கடத்தும் அவசரத்தில்
விரையும் மிதிவண்டி...

யானையை மிரட்டுபவள்
கொசுவிற்கு பயந்தலறும் காட்சியைக்கண்டு
ரசிக்கும் படுக்கையறை...
கொள்ளை மகிழ்வை
கொத்தாய்க்கொடுக்க
இவளால் மட்டுமே முடிகின்றது...

8 comments:

  1. வணக்கம்
    அற்புத வரிகள் வாழ்த்துக்கள் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான வரிகள் அம்மா...

    ReplyDelete
  3. சின்ன கண்ணம்மாக்கள் செய்யும் குறும்புகள் நம்மை குழந்தையாக்கிவிடும்! அருமை!

    ReplyDelete
  4. குட்டிகளின் குறும்புகள் ரசிக்கத்தானே....
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  5. ரசித்தோம் சகோ! குழந்தை குழந்தைதான்...

    ReplyDelete
  6. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...