Sunday, 1 November 2015

யார் நீ?

எனக்கு இணையில்லை நீ
எப்போதும், என்றும் ஆகமுடியாது
எனைப்போல் நீ...

என்நாட்டில் என்விருப்பம்
எதையும் ஏற்கும் என்னுடல்
மரக்கறியோ மாட்டுக்கறியோ
மறுப்பதும் ஏற்பதும்
என் உரிமை...

வந்தேறிகளுக்கு தெரியாது
வளமாய் வாழ்ந்த எங்கள்
வரலாறு...

வாய்மூடீ இருப்பதால்
வாய்க்கு வந்ததெல்லாம்
வழிமொழியும் அதிகாரம்
வந்திடாதுனக்கு

உண்மையுணரும்
காலமதிகமில்லை
கதறும் காலம் மாற...

29 comments:

  1. Replies
    1. மிக்கநன்றி சகோ.

      Delete
  2. வரலாறு தெரியாத புலம்பல்....!

    ReplyDelete
  3. காலமதிகமில்லை

    கதறும் காலம் மாற...# இந்த நம்பிக்கையில் தான் விடிகிறது

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் தானே..

      Delete
  4. அதிரடியான கவிதை!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்.

      Delete
  5. ஆதிக்கத்திற்கு சவுக்கடி!

    ReplyDelete
  6. உண்மைதான் சகோதரியாரே
    உண்மையை உணரும் காலம்
    தொலைவில் இல்லை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. விடியட்டும் அண்ணா...

      Delete
  7. ஹ்ம்ம் அருமை கீதா..
    காலம் வருமா?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வரும்மா..

      Delete
  8. கவிதை வரிகளில் விளாசல்
    அருமை அக்கா...

    ReplyDelete
    Replies
    1. நன்றிபா தீர்வு கிடைத்தால்தானேபா நல்லது..

      Delete
  9. அக் காலத்திற்க காத்திருப்போம். நல்ல எதிர்பார்ப்பு.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வரட்டும்..மிக்கநன்றி அய்யா..

      Delete
  10. அருமை! செம அறை! சகோ....உங்கள் கவி உரை, உறைக்குமா அவர்களுக்கு!?

    ReplyDelete
    Replies
    1. எங்க சார்...உறைச்சா நல்லது ஆனா...?

      Delete
  11. சகோ! ஒரு சிறு வேண்டுகோள் உங்கள் பதிவுகள் எங்கள் மெயிலில் கிடைக்க மின் அஞ்சல் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. அவசியம் உங்களுக்காக வைக்கின்றேன்..சார்.

      Delete
  12. நல்ல கவிதை. இன்னும் கொஞ்சம் விரிவாகவே இருந்திருக்கலாம். “பொன்னியின் செல்வன் நாவல் ரொம்ப நீளமாக இருக்கிறதே என்று சொல்கிறார்கள்.. குரங்குக்கு வால் நீண்டால்தான் தவறு, மயிலுக்கு தோகை நீண்டால் அதுவும் அழகுதான்“ என்று சொன்னதாக பொ.செ. முன்னுரையில் ஒரு வாசகம் வரும். அதனால...தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா...இனி விரித்து எழுத முயற்சிக்கின்றேன்..

      Delete
  13. அருமையான கவிதை அம்மா

    ReplyDelete
  14. யோசிக்கவேண்டியதை பகிர்ந்தவிதம் நன்று,

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...