Saturday, 14 November 2015

நந்தலாலா இணைய இதழ்-வலையெழுத்து

நந்தலாலா இணைய இதழ்-வலையெழுத்து

வலையில் வீழ்வோமா?
                    எனது வலையில் வீழும் அன்பு இதயங்களுக்கு மனம் நிறைந்த வணக்கம்….
             உங்களுடன் சிலநாள் அகமும் புறமும் மகிழ …மண்ணில்  கலந்த மழையாய்….வசப்படும் வார்த்தைகளால்…வலைப்பூக்களின் வாசத்தில் மகிழப்போகின்றேன்…இவ்வரிய வாய்ப்பைத் தந்த நந்தலாலா இணைய இதழாசிரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்….

             வலைப்பூக்களை அறிமுகம் செய்யும் இவ்வரிசையில் யாரை அறிமுகம் செய்யப்போகின்றீர்கள் எனக்கேட்டதும்…வலைப்பதிவர் விழா 2015 இல் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு கட்டுரைப்போட்டியில் சுற்றுச்சூழல் குறித்த
 ”கான் ஊடுருவும் கயமை”
என்ற தலைப்பில் எழுதி பரிசை வென்ற அன்புக்குரிய சகோதரி கீதமஞ்சரிவலைத்தள ஆசிரியர் ,

கீதாமதிவாணன் சட்டென்று நினைவிற்கு வந்தார்.ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டு நமது இதயங்களை எல்லாம் வார்த்தை வலையில் வீழ்த்தி அங்குள்ள பறவைகளை, விலங்குகளை,பூக்களை நமக்கு அறிமுகம் செய்யும் ,இயற்கையை நேசிக்கின்ற இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்பின் எல்லையைத்தொடவைக்கும்…ஆழ்ந்த, விரிவான,அறிவுப்புதையல்களை தன்னுள் கொண்டிருப்பவை… இவரை இன்று அனைவருக்கும் அறிமுகம் செய்வதில் மட்டில்லா மகிழ்வடைகின்றேன்…
மேலும் தொடர....
http://www.nanthalaalaa.com/search/label/வலையெழுத்து

23 comments:

  1. சகோதரிக்கு வாழ்த்துக்கள்...

    உங்களுக்கு நன்றிகள்... தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  2. சகோதரிக்கு வாழ்த்துக்கள்
    தம+1

    ReplyDelete
  3. மிகச்சிறப்பானதோர், வளரும் எழுத்தாளரை, முதலில் தேர்வு செய்துள்ளது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. :)

    என் வலைத்தளத்தினில் 2014ம் ஆண்டு நடைபெற்ற 40 வார ‘சிறுகதை விமர்சனப்போட்டி’களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு, ஒட்டுமொத்த வெற்றியாளர்களின் பட்டியலில் முதலிடம் பெற்று ‘விமர்சன வித்தகி’ என்ற சிறப்புப்பட்டமும் பெற்றவர் ஆவர் நம் கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன் அவர்கள். மேலும் விபரங்களுக்கு:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html

    http://gopu1949.blogspot.in/2014/10/5.html

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்....

      Delete
  4. தகுதியான திறமையாளரைத் தான் முதல் நபராகத் தேர்வு செய்துள்ளீர்கள். இரு கீதாக்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா..

      Delete
  5. அறிமுகமாகின்றவர், அறிமுகப்படுத்தப்படுபவர், அறிமுகப்படுத்தப்படும் தளம் என்ற அனைத்து நிலைகளும் சிறப்பாக அமையும்போது மனம் திறந்து பாராட்டுவோம். வாழ்த்துகள். நந்தலாலா மூலமாக அறிமுகமாகும்போது இன்னும் மனம் மகிழ்வே. எழுத்துக்குக் கிடைக்கும் ஓர் அங்கீகாரம். நன்றி. 

    ReplyDelete
    Replies
    1. மனம்நிறைந்த நன்றி அய்யா..

      Delete
  6. திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சகோ..

      Delete
  7. Replies
    1. மனம் நிறைந்த நன்றி சகோ..

      Delete
  8. சகோ கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துகள்......

    இணைப்பிற்குச் சென்று இப்போதே படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் படியுங்கள் சார்..

      Delete
  9. ஆஹா! சரியான தேர்வு, கீதமஞ்சரிக்கு வாழ்த்துகள் :-)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா கீதாவை முழுமையாக படித்த போது மிகவும் வியப்பாக இருந்தது..சரியான தேர்வுதான் என்பதை வை.கோபாலகிருஷ்ணன் சாரின் பதிவுகளைப்படித்த போது உணர்ந்து கொண்டேன்..

      Delete
  10. வணக்கம்

    வாழ்த்துக்கள் சகோதரி. த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சகோ..

      Delete
  11. சகோதரி கீதா மதிவாணனின் அந்தக் கானுறை உயிரினங்கள் பற்றிய பதிவுகளை நானும் பார்த்து வியந்து மகிழ்ந்திருக்கிறேன். சரியான தேர்வுதான் தங்கையே! (ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..மாதிரி ஒரே எழுத்துல ரெண்டு வெளியீடு? நல்லது தொடர்க!) அப்புறம் என்னைக் கடவுளிடம் கைகாட்டிவிட்டதை இப்பத்தான் பாத்தேன். அதுக்குள்ள ரொம்பப் பேரு தொடர்ந்திருக்காகளே? நான் தான் லேட்டா? அந்தக் கடவுள்தான் நம்ம உடம்பப் படுத்துறானே(?) நாலஞ்சு நாளா உடம்பக் கவனிக்க வேண்டியதாயிருச்சு..இனிமேல்தான் கடவுளை நான் கவனிக்கணும். நன்றிம்மா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா என்ன இன்னும் ஒரு தகவலும் இல்லையேன்னு நானும் மாலதியும் நேற்று பேசிக்கொண்டிருந்தோம்...உடல்நலத்தைக்கவனித்துக்கொள்ளுங்கள்..அண்ணி இல்லையேன்னு இப்பதான் கவலை வருது....கடவுள பார்க்க உங்களத்தான் முதலில் அழைத்தேன்....கவனிங்க கடவுள கொஞ்சம்..

      Delete
  12. ஆஹா! அருமையான பதிவர்! சகோதரி கீதாமதிவாணன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

    உங்கள் சுட்டியைச் சென்று வாசிக்கின்றோம் சகோ..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...