Sunday, 15 November 2015

யார் மீது தவறு?

யார் மீது தவறு?

வட மாநிலத்தில் ஒரு இளைஞன்...பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்றான் என்பதற்காக அவனை பொதுமக்கள் அடித்து துவைத்து செருப்பு மாலைப்போட்டு அரைகுறை ஆடையுடன் நடுத்தெருவில் இழுத்து வரும் செய்தியைப்பார்த்த போது மனம் வலித்தது....

யார் மீது தவறு ?

பெண் என்றாலே போகப்பொருள் என்ற கற்பிதத்தை ஆண்கள் மனதில் பதிய வைத்தது யார்?

பெண்கள் ஆண்களின் உடைமைகள் என்ற எண்ணத்திற்கு வலுவேற்றியது யார்?

பெண்களுக்கு என்று எந்த வித தனிப்பட்ட ஆசைகளும் எண்ணங்களும் சுயமரியாதை இருக்க கூடாதென்ற எண்ணத்தை ஊன்றியவர்கள் யார்?

பெண்களுக்கு சமூகச்சிந்தனைகள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது யார்?

பெண் என்பவள் தாழ்த்தப்பட்ட குலத்தினும் தாழ்ந்தவள் எனத்தாழ்த்தியது யார்?

பெண்களை அலங்காரப்பொருளாக்கி மகிழ்வது யார்?

பெண்களே தங்களை அழகு பொம்மைகள் என எண்ண வைத்தது யார்?
ஆண்களின் ஆசை தனிக்கும் கருவியாகப்பெண்களைப்பயன் படுத்திக்கொள்ளலாம் என்ற உரிமையை யார் கொடுத்தது?

கல்வி கற்ற பெண்கள் கூடத்தெளிவின்றி வாழக்கற்றுக் கொடுத்தது யார்?

பெண்களைப்பொதுப்பொருளாக்கி மகிழ்வது யார்?

எந்த பெண்ணாயினும் உடல்ரீதியான பேச்சால் வீழ்த்தலாம் என நினைத்து வெற்றி பெற்றது யார்?

அந்த இளைஞன் ஒரு அம்பு மட்டுமே...இவனை அடித்தால் வேறு ஒருவன் எழுவான் பெண்களை பாலியல் வென்முறை செய்ய...அவனை என்ன செய்வது...

சமூகப்புரட்சி நடந்தால் ஒழிய பெண் என்பவள் ஒரு போகப்பொருளாகவே தானும் எண்ணி வீழ்வாள்...

பெண் என்பவள் சகமனுஷி என்ற எண்ணத்தை விதைத்தால் ஒழிய பெண்களின் மீதான வன்முறை அழிய வாய்ப்பே இல்லை...குடும்பமும் சமூகமும் இந்த எண்ணத்தில் இணைந்து பயணித்தால் மட்டுமே பெண்ணும் ஆணும் தெளிவாக வாய்ப்புண்டு..




12 comments:

  1. கேள்விகளுக்கு பதில்கள் நீங்களே + சொல்ல வேண்டும்...!

    ReplyDelete
  2. ஆழமான வரிகள்...அவசியமான கேள்விகள்

    ReplyDelete
  3. கேள்விகள் அருமை! பதில்? சகோ அதையும் நீங்கள் ஒரு பதிவாக இட்டுவிடலாமே....

    ReplyDelete
  4. என்றுதான் இந்த அவலங்கள் மாறுமோ?!

    ReplyDelete
  5. பல கேள்விகளுக்கும் காரணகர்த்தா ஆண் வர்க்கம் என்பது உண்மையே.... தற்காலத்தில் இதற்க்கு பெண்களும் காரணமாக நலிந்து போனதும் ஒரு துணைக்காரணம் என்று சொல்லலாம் இதனைக்குறித்து நான் பதிவிடுகிறேன் விரைவில்....

    என்னைப் பொருத்தவரை ஆணின்றி பெண்ணில்லை பெண்ணின்றி ஆணில்லை.

    ReplyDelete
  6. இரண்டு பாலினருமே மாற வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது

    ReplyDelete
  7. நல்ல பதிவு. நல்ல கேள்விகள். உங்கள் கேள்விகளுக்கு பதில் நீளமாக இருப்பதால் என் பதிவில் போட அனுமதியுண்டா!

    ReplyDelete
  8. //மனம் வலித்தது// - இங்கதான் தப்பே ஆரம்பிக்கிறது.

    ReplyDelete
  9. உலகம் சுருங்கிவிட்டது... கூடவே நம் உள்ளங்களும்.. பந்தயக்குதிரைகள் போல பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்... உறவுகளின் பெருமை மறக்கடிக்கப்பட்டுவிட்டது. ஊடக தர்மங்கள் மலிந்துவிட்டன..வன்முறைகள் வேடிக்கைகளாகிவிட்டன. கல்விமுறை பெரும்சுமையாகிவிட்டது. வளரும் தலைமுறைக்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் மறுக்கப்பட்டு, தேவையற்றவை திணிக்கப்படுகின்றன. நிதானமிழந்து வாழும் வாழ்க்கையில் நெறிகெட்டுப்போகும் அபாயம் ஆண் பெண் இருபாலாருக்குமே உண்டு. முதலில் தேவை நிதானம்... பெற்றோரின் கையில்தான் இருக்கிறது பிள்ளைகளின் எதிர்காலம்.

    ReplyDelete
  10. உயர்ந்த மகாகவி என்றாலும் கூட, பாரதிபோலும் ஆண்கள்-
    “பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு“ என்று பாடியதும்,
    அதே பாரதி, “தையலை உயர்வு செய்“ என்று பாட,
    வள்ளுவன் எனும் மாமேதை, “பெண்வழிச் சேறல்“ என்றொரு அதிகாரம் செய்ய,
    ஔவை போலும் பேரறிஞர்களான பெண்புலவரே,
    “தையல் சொல் கேளேல்“ என்று எழுத,
    சங்கப் பெண்களோ,
    “வினையே ஆடவர்க்கு உயிரே,
    மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்“ என வாழ்ந்த நாடு நம் நாடு.
    “ஆண் உலகம்“ என்பதுதான் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்.
    ஆண்களைப் பெற்றதாலோ என்னவோ பெண்களும் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பமுடியாது தங்கையே!, உங்களைப்போல உணர்ந்து, புரிந்து எழாதவரை!

    ReplyDelete
  11. மிகவும் அருமையான கேள்விகளால் ஒரு வேள்வி! வாழ்த்துகள் தங்கையே! த.ம.கூடுதல்1

    ReplyDelete
  12. வரிகள் அருமை!
    இந்நிலைக்குக் காரணம் ஆண்-பெண் இருவருமே, இதில் இருவருக்கும் சமமான பங்குண்டு...சட்டங்களியறுத்தலை விட நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...