Friday, 2 October 2015

அழைக்கின்றோம்...ஆவலுடனே

                            வாழ்க்கையில் எதை சேர்த்தோம் என்பது பெரிதல்ல எத்தனை மனிதர்களை தெரிந்து கொண்டோம்....இனிமையான நட்புகளை கடைசி வரைக்காப்பாற்றி நாம் இல்லாத போழ்தும் நினைவில் வாழ்வதே வாழ்க்கை...


...வீட்டுக்குள் தான் இருக்கின்றோம் என்பது மறைந்து பூமிக்கு மேலே பறப்பதாய்....ஒரு பறவையாய் அனைத்தையும் பார்த்து ரசிக்கின்றோம்..தனிமை என்ற வார்த்தை மறைந்து உறவுகள் பெருகிட வாழ்கின்றோம்....

                 உலகமனைத்தும் நம் உறவுகள் தமிழால் இணைந்துள்ளதை மகிழ்வோடு காண்கின்றோம்...நாம் மனிதர்கள்,தமிழர்கள் என்ற ஒரே உணர்வே நம்மை இணைத்துள்ளது என்பதை மறுக்கவியலாது...

வாருங்கள் அனைவரும் குறையின்றி உங்களை கவனிக்க காத்திருக்கின்றோம்...நம் விழா....மொழி ஒன்றே நமது பாலம்...வென்ற தமிழ் மேலும் வெல்லட்டும் ..கணினி யுகத்தில்...
 வாழும்   வரை பல இடங்களையும்,நல்ல மனங்களையும் வலையில் வீழ்த்தி மனதிற்குள்  மகிழ்வோடு சுமப்போம்...




15 comments:

  1. நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் இணையத்தால் இணைந்து நட்பை எல்லோரிடமும் விதைத்து வளர்த்து கொண்டிருக்கிறோம். உங்களைப் போல உள்ளவர்களின் அழைப்பை ஏற்று வர ஆசைதான் ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை இடம் தரவில்லை . கண்டிப்பாக உங்கள் ஊருக்கு ஒரு நாள் விஜயம் உண்டு அன்றுதான் எனக்கு ஒரு திருநாள் விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள் உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அட்வான்ஸ் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.....உங்கள் வரவை என்றும் வரவேற்கிறோம்...

      Delete
  2. ரெடியாகிவிட்டோம்

    நாங்க எல்லாம்
    ஒரு தடவை அழைத்தாலே
    ஓடி வந்து விடுவோம்

    இப்ப கேட்கவா வேணும்...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க...சார்.

      Delete
  3. விழா இனிதே நடக்கட்டும்.

    ReplyDelete
  4. மகிழ்ச்சியாக உள்ளது.
    விழா சிறப்புற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தங்கள் அனைவரின் முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்
    விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  7. ஆமாம் கீதா, சென்ற வருடம் பயணத்தைத் தள்ளிப்போட்டு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதால் எத்தனை நட்புகள்!!!

    ReplyDelete
  8. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...