Wednesday, 30 September 2015

அழிவாளோ அருணிமா?

 வகை-4

 "..அருணிமா..." எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" 



ஓடும் ரயிலில்

எட்டியே உதைத்தனர் விஷமிகளே

எகிறியே வீழ்ந்தேன். காலை

நசுக்கிச்சென்றது அடுத்து வந்தது..
நனைத்துச்சென்றது மனிதக்கழிவால்
நள்ளிரவில் குருதி ஆற்றில் நனைத்தே

வைகறையில் ஒதுங்க வந்தவன்
பதறி அலறி மருத்துவரிடம் சேர்க்க
தயங்கிநின்றவரிடம் துணிந்துரைத்தேன்

அறுத்தெறியுங்கள் என் காலை
கைப்பந்து கால்பந்து உதைத்து உதைத்து
கனவை அடையும் நேரம் இழந்தேன்...

நொறுங்கி வீழ்ந்தவளை
வரலாறு படைக்கவே பிறந்தாய்
வா..இமயம் தொட ..என்றே அழைக்க..

உயிருள்ள காலுடன் உயிரற்றதும் இணைய
தத்தி தத்தி நடந்தே தொட்டேன்...

இன்னும் ஏழு மலைகள் தொட்டே
ஓய்வேன் என்றே நினைத்தாரோ
ஓயேன் என்றே ஏறுகின்றேன்..


உலகமனைத்தும் ஒன்றாயின
மனங்கள் ஒன்றாவதெப்போது...
பெண்ணை அழித்தே வாழ்வீரோ
பண்பாடு அறிவீர் தோழர்களே..





13 comments:

  1. ஆஹா! வந்துட்டிங்களா! வந்துட்டிங்களா! :)
    மனம் தொடும் கவிதை அருமை கீதா
    வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பதிவர் சந்திப்புக்கான அத்துனை வேலைகளுக்கு இடையிலும்,
    கவிதை எழுதவும் தங்களுக்கு நேரம் இருந்ததா
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அழகான அருமையான இதயம் தொடும் கவிதை! வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  4. வாழ்த்துக்களம்மா,,,,,
    தங்கள் கடின பணிகளுக்கிடையேயும் கவி மழை,,
    நடக்கட்டும் நடக்கட்டும்,, வாழ்த்துக்கள் வெற்றிபெற,

    ReplyDelete
  5. நன்றி சார்

    ReplyDelete
  6. அருமை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. மனத்தைத் தொட்டுவிட்டன கவியும் கருவும். வெற்றி பெற வாழ்த்துகள் கீதா.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...