Friday, 7 August 2015

மனதை அள்ளி

மூச்சிறைக்க ஓட்டிய
மிதிவண்டியை ஓரத்தில்
சமத்தாயிருவெனெக்கூறி

ஓடிவருகையில் மிதிப்பட்டு
ஓலமிட்ட பொம்மையை
தட்டிக்கொடுத்து சமாதானம் செய்து

விறுவிறு வெனெ ஓடும் எறும்பின்
வரிசையினைத் தடுத்து
வாயிலிட்ட இனிப்பின் மீதியை
பங்கு கொடுத்து...

பட்டென்று பதறிப்பறந்த
மைனாவிற்கு டாட்டா காட்டி
பறக்கும் முத்தமிட்டு

ஏக்கமாய் பார்த்தவளின்
கன்னத்தில் கள்ளச்சிரிப்புடன்
 இதழ்பதித்தது
மனதை அள்ளி...

7 comments:

  1. கண்களில் காட்சியை விரித்த கவிதை தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. காட்சிகள் கண் முன் விரிந்தன! அருமை!

    ReplyDelete
  3. சின்னக் கண்ணன் சிரிக்கிறான் நேத்திக்கு அவன் புறந்த நாள்.

    இங்கே சின்னப் பொண்ணு
    ராதை
    என்னா சமர்த்து
    ஏன்னா சமத்து

    சுத்திப் போடுங்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. vanakam alaipu idhalai yarkanava paarthan. marupadium vila kulu saarpaga alithamiku vaalthukal.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...