Monday, 24 August 2015

புதுவீடு


பார்த்துப் பார்த்து
ரசித்து ரசித்து
தடவிக்கொடுத்து
மெல்ல வளர்கையில்
மனதிற்குள் மகிழ்ந்து
கொஞ்சம் ஊனப்பட்டாலும்
கோபப்பட்டு பதறி

முழுதாய் வளர்ந்து
முன்னே நிற்கையில்
மாப்பிள்ளையின் கைப்பிடித்து
மருகிச்செல்லும் மகளைப்
பெற்றவனாய்
தள்ளிநின்று ரசித்து கடக்கின்றான்
புதுமனைப்புகும் விழாவில்...


5 comments:

  1. எல்லாம் சரிதான் யாருடையது சொல்லவே இல்லை இருப்பினும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கவிதையும் அழகு, வீடும் அழகு.

    ReplyDelete
  3. ஏதோ சொல்ல வருகின்றீர்கள்....
    புதுமனை புகுந்தோருக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
  4. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...