Friday, 14 August 2015

68th Independence day-68 ஆவது சுதந்திரதினம்-2015

68 ஆவது சுதந்திரதினம்-2015
-----------------------------------------------------

ஆங்கிலேயரிடமிருந்து பெற்று
ஆங்கிலத்திடம் கொடுத்துவிட்டோம்

தலைநிமிர்ந்த தமிழை
தலைகுனியச்செய்தோம்

சுரண்டியவர்களை விரட்டி
சுரண்டி மகிழ்ந்தோம் நாமே

சாதியினால் பிளவுண்டோம்
சரக்கடித்து மறந்தோம்

பால்  குடிக்கும் குழந்தையைக்கூட
பாலியல் வன்முறை செய்கின்றோம்

இத்தனையையும் செய்ய அனுமதித்த
இந்தியச்சுதந்திரத்தை
கொண்டாடி மகிழ்வோம்

மனமயக்கத்தை அகற்றி
மலரும் இந்தியாவை
மணம் வீசச்செய்வோம்

மதங்கடந்த மனிதநேயத்தை
மனிதரிடயே வளர்த்து

இனங்கடந்த இனிமையை
இதயந்தோறும் விதைத்து

சாதியற்ற மனங்களை
சாதிக்க ஒன்றிணைத்து

அணுகுண்டு அழித்து
அறிவியலை பசுமைக்கு
பண்படுத்தி....


உலகமே வியக்க
உன்னத இந்தியாவை
உருவாக்க உறுதியெடுப்போம்


6 comments:

  1. எல்லாவற்றையும் நாமேதான் செய்தோம்! நாமே உன்னத இந்தியாவை உருவாக்குவோம். – என்ற கருத்தினை உள்ளடக்கிய கவிதை. எனது உளங்கனிந்த இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உறுதியெடுப்போம். சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கவிதை அருமை இனி. சுதந்திர தின வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அருமையான வரிகள்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. கருத்துள்ள கவிதை....அருமை...சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...