Wednesday, 8 July 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பு

ஒவ்வொரு கணமும் மனதை நிறைத்திட அன்பானவர்களின் சந்திப்பால் மட்டுமே முடிகின்றது.

இன்று மாலை கவிஞர் முத்துநிலவன் அவர்களின் இல்லத்தில் இனியவர்கள் கூடிய இனிமையான சந்திப்பு .

அபுதாபியிலிருந்து வந்த” தேவக்கோட்டைகில்லர்ஜி” அவர்கள் தான் இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம்.மதுரையில் நடந்த சந்திப்பில் தான் இவரைப்பார்த்தோம்....பேரு மட்டுமல்ல ஆளும் பார்க்க பெரிய மீசையுடன் பயமுறுத்துபவராய்...பழகிய பின் தான் எவ்ளோ ஏமாந்து விட்டோம்னு தெரிந்தது....கடுமையான முகத்திற்கு பின் அமைதியான, நகைச்சுவையான ,  வலைப்பூவில் கலகலன்னு கலக்குபவராக அவரின் பரிமாணங்கள்....புதுக்கோட்டை வலைப்பதிவர்களை குடும்ப உறவுகளாக மாற்றிக்கொண்ட தன்மை....அவர் எங்களைக்காண இங்கு வந்தது....மகிழ்வானதும் பெருமையானதும் கூட ...



தஞ்சையிலிருந்து வந்த சகோ கரந்தை.ஜெயக்குமார்..எங்களுக்கு வலைப்பூ துவங்க வகுப்பு எடுத்தவர்...அவரின் ஊக்கத்தாலும் ,திண்டுக்கல் தனபாலன் சார் அளித்த பயிற்சியாலும் புதுகையில் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

 முனைவர் ஜம்புலிங்கம் அய்யா விக்கிபீடியாவில் இருநூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதி தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்..அவரின் கட்டுரைகள் அனைத்தும் ஆகச்சிறந்த கட்டுரையாக அமைந்துள்ளன.விக்கி பீடியா குறித்த அவரின் கருத்து முக்கியமானதொன்றாக இருந்தது.

திருச்சியிலிருந்து வந்த தமிழ் இளங்கோ சார் வலைப்பதிவாளர்களில் மிகச்சிறந்தவர் அவரும் எங்களைக்காண வந்தது மகிழ்வான ஒன்று.

எங்களைக்காண வந்தவர்களைக்காண புதுகையில் உள்ள சகோ.. கஸ்தூரிரங்கன்,ஆசிரியர் அப்துல்ஜலீல்,கவிஞர் வைகறை,கவிஞர் சோலச்சி,கவிஞர் .மகா.சுந்தர்,கவிஞர் செல்வா,கவிஞர் நீலா,மீனாட்சிசுந்தரம்,தோழிகள் ஜெயா,மாலதி ஆகியோருடன் நானும் கலந்து கொண்டது மனதிற்கு நிறைவாக இருந்தது.

விரைவில் புதுக்கோட்டையில் வலைப்பதிவர்களின் மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி துவங்குவதற்கு இந்த சந்திப்பு  அடித்தளமிட்டுள்ளது.கவிஞர் மல்லிகா,  மருமகள்கள் வால்கா மற்றும் இலட்சியாவின் அன்பான வரவேற்பு மனதை நிறைத்தது.

                                         ”   நிலவன் வீட்டில்
                                            சூரியக்குடும்பம்”-
                                   என்ற கவிஞர் செல்வாவின் கவிதை
உண்மையானது..

16 comments:

  1. அருமையான ஒரு சந்திப்பு... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான சந்திப்பு! நண்பர் கில்லர்ஜி சொல்லி இருந்தார் தங்களை எல்லோரையும் சந்திப்பது பற்றி...

    மகிழ்வான தருணம்...!!!

    ReplyDelete
  3. நல்ல சந்திப்பு..ஆனந்தமாக இருந்திருக்கும் அல்லவா..? அருமை, அருமை...சகோ

    ReplyDelete
  4. புதுக்கோட்டையில் இன்று (08.07.15) மாலை நடைபெற்ற வலைப் பதிவர்கள் சந்திப்பில் கலந்து விட்டு, திருச்சிக்கு இப்போதுதான் வந்து சேர்ந்தேன். அதற்குள் சுடச்சுட அந்நிகழ்ச்சி பற்றிய பதிவு. நன்றி! நன்றி சகோதரிக்கு நன்றி! (மீண்டும் வருவேன்)
    த.ம.1

    ReplyDelete
  5. எல்லோரையும் ஒருசேரக் காண மகிழ்வாக உள்ளது. மகிழ்வான தருணம். அருமையான சந்திப்பு வாழ்த்துக்கள் ...!பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  6. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. ஆகா அதற்குள் சுடச்சுட பதிவு தந்து அசத்திவிட்டீர்கள் சகோதரியாரே
    உண்மையிலேயே மகிழ்ச்சியான மறக்க இயலாத சந்திப்பு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  8. புதுக்கோட்டையில் நாம் அனைவரும் சந்தித்ததை பிற வலைப்பூ நண்பர்களும் அறியும் வகையில் பகிர்ந்தமைக்கும், விக்கிபீடியா பதிவுகள் குறித்த எனது சிறு முயற்சியை விவாதத்திற்கும் நன்றி. விரைவில் பதிவர் மாநாட்டில் அனைவரும் சங்கமிப்போம்.

    ReplyDelete
  9. T H A N K S ...... Thanks..... to Sako"s......

    ReplyDelete
  10. மகிழ்வான சந்திப்பிற்கு வாழ்த்துகள்
    கில்லர்ஜி பதிவிலும் கல கலகல பேச்சிலும் கலகலதான்

    ReplyDelete
  11. வணக்கம்,
    மகிழ்வான தருனங்கள் அவை, மகிழ்ச்சி,
    நன்றி.

    ReplyDelete
  12. கில்லர்ஜியின் இந்திய வருகையும்
    பதிவர் சந்திப்பும் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  13. மகிழ்வான சந்திப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. கில்லர்ஜி நிஜத்திலும் கலக்ககூடியவர் என்பதை தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அருமையான நிகழ்ச்சி, அழகான நினைவு.
    நன்றி சகோ!

    ReplyDelete
  15. நன்றி சகோ.கீதா. எனது பதிவிலும் தங்கள் பதிவை மேற்கோளிட்டு சிலவரிகள் எழுதியிருக்கிறேன்..நமது புதுகை நட்பு வட்டம் இன்னும் சாதிக்கும் எனும் நம்பிக்கை உள்ளது - வந்து காண்க- நன்றி http://valarumkavithai.blogspot.com/2015/07/blog-post_9.html

    ReplyDelete
  16. அருமையான சந்திப்பை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...