Tuesday, 7 July 2015

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாதது
---------------------------------------------
முன்பெல்லாம் பெண் குழந்தைகளின் படிப்புக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்காத காலம்...அம்மா சொல்லும் வீட்டு வேலைகளைச்செய்து ,சமையல் கற்றுக்கொண்டு திருமணத்திற்கு தயாராக்கப்பட்ட காலங்கள்..

ஆண்கள் வெளியே போய் வேலை பார்ப்பது மட்டுமே சிறப்பு என்றும்,வீட்டு வேலை செய்வதையோ,குழந்தைகட்கு பணி செய்வதையோ அவமானம் எனக் கருதிய காலம் ..கொஞ்சம் வேலை செய்தாலும் பொட்டைபய என தன் குடும்பத்தினரால் வசை வாங்கிக்கொண்ட காலம்....



ஆனால் இப்போது நிலைமை தலைகீழ் ஆண்களுக்கு இணையாக படிப்பே கதி என பெண்குழந்தைகள் வளரும் காலம்...பெற்றோர்களும் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பதற்காக வீட்டுவேலைகளைச்சுமத்தாமல் தானே செய்துவிடுகின்றனர்..தற்காலப்பெண்கள் வீட்டு வேலைக்கு பழக்கப்படுவதில்லை ...கல்வியின் முக்கியத்துவம் அவர்களை வெளி உலகிற்கு அழைத்து வந்து விட்டது...

அவர்கள் புறம் சார்ந்த பணியை மிக புத்திசாலியாக பணி புரிந்து சிறக்கின்றனர்..ஆனால் திருமணத்திற்கு பின்  தான் வீட்டு வேலையையும் கவனித்துக்கொண்டு அலுவலகத்திலும் பணி செய்ய வேண்டும் என்ற நிலையில் இரட்டைச்சுமையை சுமக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளனர்...இந்த தெளிவு அவர்களின் சிந்தனையில் திருமணம் பற்றியக்கருத்தை மாற்றி உள்ளது...திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர்...

ஆண்களும் இக்காலத்தில் வீட்டு வேலையில் துணை புரிந்தாலும் முழுப்பொறுப்பும் பெண்களுக்கே என்ற நிலைதான் இன்றும் .....

அவளுக்கு என்று தனி விருப்பம் ,தனித்தன்மை இருக்கக்கூடாதென்பதில் ஆண்கள் இன்னும் மாறவில்லை அல்லது சமூகம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை.


வீட்டுப்பணிகளில் மனைவியின் பங்கை கணவன் அங்கீகரிக்காத போது, அவள் தன் மகனை ஆம்பிளைக்குரிய குணங்களுடன் வளர்க்கின்றாள்...அக்குழந்தையும் அப்பாவைப்பார்த்தே வளர்கின்றது...அம்மா அவ்வளவு பணி செய்தும் அலட்சியப்படுத்தப்படுவதைப்பார்க்கும் மகளும் வீட்டு வேலை அவமானமாகக்கருதும் நிலை...தன் தாய்க்கே உதவி செய்ய மறுக்கும் நிலைதான் இன்று.

குழந்தை வளர்ப்பில் இன்னும் தெளிவு பெற வேண்டும் தான் வளர்ந்ததைப்போன்றுதான் தன் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பது தவறு ..


.இக்காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்பவே இரு பாலினரையும் சமமாக வளர்க்க வேண்டும்...

ஆண்குழந்தைகளுக்கும் பெண்குழந்தைகளுக்கும் வீட்டுப்பணி செய்வது கேவலமில்லை என்ற சிந்தனையை வளர்க்க வேண்டும்....

இம்மாற்றம் இல்லையெனில் இல்லறம் இனிமையாக இருக்க வாய்ப்பில்லை.

வளரும் சந்ததி மகிழ்வுடன் வாழக்கற்றுக்கொடுப்போம்.

2 comments:

  1. // தான் வளர்ந்ததைப்போன்றுதான் தன் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பது தவறு // சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...