Saturday, 23 May 2015

அண்ணன் மகளின் திருமணத்தில்...


பல வருடங்களுக்குப்பின் அண்ணன் மகளின் திருமணத்தில் சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடினோம்.கலகலன்னு குட்டீஸ்களின் லூட்டியில் பாவம் மாப்பிள்ளை பயப்படாத மாதிரியே காட்டிக்கொண்டார்.

அக்காவுடன் விருந்துக்காக வடை சுட்டுக்கொண்டிருந்த போது ஒரு வாண்டு மெல்ல வந்து பெரீம்மா எனக்குன்னு கை நீட்டியது.சத்தம் போடாமல் இங்கேயே சாப்பிடுடா..எல்லா குட்டீஸும் வந்துட்டா அப்றம் பரிமாறுகையில் பத்தாதுடான்னு கெஞ்சிய போது சரிசரின்னு தலையாட்டிவிட்டு கடைசி வடை சாப்பிடும் போது ஓடி எல்லாருக்கும் காட்டி விட்டு போய்ட்டான்.அவ்ளோ தான் பின் வந்த எல்லோருக்கும் தனியா தனியா கொடுக்க வேண்டியதாச்சு.

கலந்த கூல்டிரிங்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு மெல்ல ஒண்ணு தலையை நீட்டி அத்தை உங்க பங்க குடிச்சிட்டீங்களான்னு வந்து வாங்கிட்டு போயிடுச்சு
.

பத்து குட்டீஸுக்கு மேல் அதிர்ந்தது வீடும் மண்டபமும்,மகிழ்வில்மனமும்.

சிறுவயதில் செய்த செயல்களைக்கூறி ஒருவருக்கொருவர் வாரிக்கொண்டு...தூங்கியவளை எழுப்பி 1 மணிக்கு டீ கொடுத்து பேசிக்கொண்டிருப்போம் வாடி என உரிமையோடு அழைக்கும் உறவுகள் மனதிற்கு இனிமைதான்.

நடுவில் உள்ள குட்டி கதிரவன் எனக்கு செல்போனில் போட்டோவில் எப்படியெல்லாம் மாற்றம் செய்யலாம் என கற்றுக்கொடுத்தபோது வியந்து கற்றுக்கொண்டேன்.எவ்ளோ விசயங்கள் குழந்தைகளுக்குத்தெரியுது என.

மனம் நிறைய குழந்தைகளின் சேட்டைகளைச் சுமந்து வந்துள்ளேன்.காது வலித்தாலும்,கத்தி கத்தி தொண்டை நொந்தாலும்,அளவிற்கு மீறிய சேட்டையை பொறுக்க முடியாமல் கோபித்தாலும் குழந்தைகள் மனதில் மணம் வீசிக்கொண்டிருக்கின்றனர்.

7 comments:

  1. உண்மை தான் அக்கா! இப்படி விடியவிடிய பேசிக்கொண்டிருந்த, கொண்டிருக்கிற அனுபவங்கள் எத்தனை இனிமையானவை!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. பழய நினைவுகள் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். நன்றி.

    ReplyDelete
  5. குழந்தைகள் குறும்பு திகட்டாத ரசனைதான்!
    த ம 2

    ReplyDelete
  6. வணக்கம்

    இது ஒரு இனிமையான நிகழ்வு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...