Sunday, 10 May 2015

என் அம்மா

என் அம்மா...
------------------------
அன்பின் மறுவடிவம்
ஆக்ரோஷத்தின் உச்சம்
விருந்தோம்பலில் மிஞ்சிட முடியாது

எல்லாமே உச்சமாய்
குழந்தைகளே வாழ்க்கையென
வாழாது வாழ்ந்தவள்.

இருந்த இடம் அதிரும்
இடிமுழங்கும் குரலால்.

குறையொன்றுமில்லையம்மா  உன்னருகில்
இருந்த போது...

வெறுமையில் தேடியுள்ளேன்
வாழ்வை உணர்ந்த போது
வெற்றிடமாய் நீ கரைந்தாய்...

உனை நினைக்கும் போதெல்லாம்
வீழ்கின்றாய் உப்புநீராய்.....

இல்லாதபோழ்தே தெரிகின்றது
இனியவளே உன்னருமை...

உன்னில் மீண்டும் கருவாகத் துடிக்கின்றேன்
உலகில் போதுமென்றன் வாழ்வு...

இன்று அன்னையர் தினமாம்
வாயேன் ஒரு முத்தமிட்டு அழைத்துச்செல்ல..




22 comments:

  1. உலகின் அழகான கவிதை அம்மா.

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.நன்றி

      Delete
  2. ///உன்னில் மீண்டும் கருவாகத் துடிக்கின்றேன்///
    அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  3. வணக்கம்
    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. // உனை நினைக்கும் போதெல்லாம்
    வீழ்கின்றாய் உப்புநீராய்.....
    இல்லாதபோழ்தே தெரிகின்றது
    இனியவளே உன்னருமை. //

    உருக்கமான வரிகள். அண்மையில் மறைந்த எனது அன்னையின் பிரிவை நினைத்து கலங்கினேன்.

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. அம்மா இல்லாத வாழ்வு வெறுமை சார்

      Delete
  5. அன்னையைப்பற்றிய உயர்வான சிந்தனை அருமை சகோ
    நானும் அன்னையைப்பற்றி கவிதை கொடுத்துள்ளேன் காண வருக...
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் வலைப்பக்கம் வருகிறேன்.விளம்பரங்களின் தொல்லையால் தூரத்தில் இருந்த நான் நன்றி.

      Delete
  6. நெஞ்சுதொடும் கவிதை.
    த ம 6

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி.

    தங்கள் கவிதை அருமையாக உள்ளது சகோதரி. தங்களுக்கு என் உளமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    \\குறையொன்றுமில்லையம்மா உன்னருகில்
    இருந்த போது...//
    \\இல்லாதபோழ்தே தெரிகின்றது
    இனியவளே உன்னருமை..//
    .
    இந்த வரிகளின் உண்மை மனதை தாக்கி விழியில் நீரை கசிய செய்கிறது. அம்மாவின் ஈர்ப்பில் தங்கள் தளத்திற்கு வந்த என் முதல் வருகை, இனியும் தொடர வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .அழகான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. என் தளத்திற்கு வந்தமைக்கு மிக்கநன்றி மா

      Delete
  8. உள்ளம் நெகிழவைக்கும் கவிதை அருமை அருமை !
    அன்னையர் தின வாழ்த்துக்கள் தோழி ...!

    ReplyDelete
  9. அம்மாவை நினைக்காத உள்ளம்
    உலகில் எங்கும் இல்வையே!
    சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...