Friday, 24 April 2015

விண்ணின் கருணை

கங்குலின் அமைதியில்
ஓவென அலறி
காற்றின் கைகளால்
கதவைஅறைந்து
தூக்கத்தைக்கெடுத்து
மின்சாரத்தைப்பிடுங்கி
நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லுக்கு பாய்வதாய்
ஆறறிவுக்கும் அளித்து
அமைதியான விண்ணை....
கைவிட்டுடாதே என
கைபிடித்துக்கெஞ்சத் தோன்றியது...
ஓடிய நீரை சேமிக்காமல்
வேடிக்கைப்பார்த்தவளை நோக்கி
நகைத்தது விண்...

3 comments:

  1. //ஓடிய நீரை சேமிக்காமல்
    வேடிக்கைப்பார்த்தவளை நோக்கி
    நகைத்தது விண்...//

    உண்மையான வரிகள். வேதனையான உண்மை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...