Wednesday, 22 April 2015

வாழ்த்துவோம்


வாழ்த்துவோம்

விந்தைகளின் உலகமது
வியப்பின் எல்லையைக்காட்டி
வியக்கவைத்து மகிழுமது

வரவேற்பு முதல் நன்றி
வரை வித்தியாசங்களின்
வகுப்பாய் அமையுமது..

மழலைகள் குதூகலிக்கும்
மகிழ்விடமது..

புத்தகமில்லா நாளை
பூக்களுக்கு காட்டி மனம்
பூப்பதை ரசிக்குமது
புதுகையின் திருவிழாவாய் ஆண்டுதோறும்
பூரித்து மகிழவவைக்குமது

கலைகளின் பிறப்பிடமாக
களிப்பூட்டி மகிழுமது
மனிதநேயம் வாழுமிடமாய்
மனங்களை நேசிக்குமதில்
மகிழ்ந்தே கூடுவோம்
வெங்கடேஸ்வரா பள்ளியில்

 எழுத்தாளர் எஸ்.ராவின் பேச்சால்
எழுச்சி பெற்று மகிழ்ந்தது....நேற்று


கவிஞராய்,  நல்லாசிரியராய்,
காந்தக்குரலுக்குச் சொந்தக்காரராய்
மனிதநேய மாண்பாளராய்
கவிஞர் பாலாவின் வித்தாய்
வாழும் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும்
வாழ்வின் துணையாய்
ஊன்றுகோலாய் திகழும்
சகோதரி அஞ்சலிமூர்த்தி அவர்களுக்கும்
மனம்நிறைந்த வாழ்த்துகள்

3 comments:

  1. வணக்கம்
    வாழ்த்து பாமாலை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 1
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:   ரூபன் &  யாழ்பாவாணன்   இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம் … வாருங்கள் … வாருங்கள் ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...