Wednesday, 15 April 2015

தனிமை


தனிமை வாழ்க்கை ஒரு வாழ்க்கையா...
ஒத்த ஆளுக்கு இவ்ளோ சம்பளம் தேவையா?
சமைக்கவே மாட்டீங்கத் தானே...

வேலை முடித்து வந்ததும்
வேலையே இல்லாமல்
வெட்டியாய் இருப்பீகத்தானே...


யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்
சுதந்திரமா சுத்தலாம்தானே,....

கடமை முடிந்து விட்ட தனிமை
வாழ்வில் கேள்விகளால்
வலை பின்னுகின்றார்கள்

எனக்கென தனியாக
எதுவும் இருக்கக்கூடாதென்பதில்
தீவிரமாய் இருக்கின்றார்கள்

என் மகிழ்வை அவர்கள்
தீர்மானிக்க முனைகின்றார்கள்...

என் வாழ்வை வடிவமைக்க
எடுக்கும்  சிரத்தையில்
சிறு பகுதி கூட அவர்களை
எண்ணிப்பார்க்க மறுக்கின்றார்கள்...

கண்ணீரைத் துடைத்த கைகளே
கண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றன ...

எல்லாவற்றையும் பார்வையாளராய்
பார்க்க கற்றுக்கொடுத்த தனிமையோ

என்னருகே கை கோர்த்துச்சிரிக்கின்றது
 நீ பெண்ணென்பதால் தான்
இத்தனையும் என...


4 comments:

  1. வணக்கம்
    தனிமை ஒரு நோய்தான்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கவிதை அருமை
    தம+

    ReplyDelete
  3. பார்வையாளராய் அனைத்தையும் கற்றுக்கொண்டவரிடம் ஏன் சோகம் , நோய்னு பயமுறுத்தறீங்க.... பெண் என்பதால் மட்டுமே தனிமை பற்றிப் பேசப்படுவதை வாழ்ந்து காட்டி ஓடுக்கத் தான் வேண்டும்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...