Saturday, 21 March 2015

ஆனந்த ஜோதி ஆண்டு விழா

21.03.15இன்று ஆனந்த ஜோதி இதழின் ஐந்தாம் ஆண்டு விழா

மிகச்சிறப்புடன் நிகழ்ந்தது.காலை கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி,கட்டுரைப்போட்டி.பல்குரலில் பேசும் போட்டிகள் நடந்தன.ஆர்வமுடன் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மாலை வெற்றிப்பேரொளி அவர்களின் தலைமையில் ஐந்து கவிஞர்கள் கவிதை வாசித்தோம்...

முனைவர் சொ.சுப்பையா அவர்களின் தலைமையில்,எழுத்தாளர் பொன்னீலன் மற்றும் முனைவர் கு.வெ.பாலசுப்ரமணீயன் ஆகியோர் சிறப்புரை வழங்க,கவிஞர் பாலாவின் மனைவி திருமதி மஞ்சுளா பாலா அவர்கள் முன்னிலை வகிக்க , ஐந்து நூல்கள் வெளியிட்டு நிகழ்வும் ,நூல் விமர்சனங்களும் வழங்கப்பட்டது.

ஆனந்த ஜோதியில் தொடந்து எழுதிய கவிஞர்கள்,சிறுகதை மற்றும் கட்டுரை ஆசிரியர்களில் சிறப்புடன் செய்தவர்களைத்தேர்ந்தெடுத்து பாராட்டிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

                          “கவிக்குயில் கீதா”

 என என்னை பாராட்டி  எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் முன் சான்றிதழ் வழங்கப்பட்ட போது மனம் நெகிழ்ந்து போனது.எனை வளர்த்த ஆனந்தஜோதி இதழ் தந்த இப்பரிசு என் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகின்றேன்.ஆனந்தஜோதி இதழ் ஆசிரியரான மீரா.சுந்தர்  அவர்கள் நிறையக்கவிஞர்களை உருவாக்கி வருகின்றார்.பொன்னீலன் அவரை இலக்கிய வள்ளல் எனப் பாராட்டி மகிழ்ந்தார்.ஆசிரியர் தனக்கு சக்கரை நோய் இருப்பதாகக் கூற அதற்கு பொன்னீலன் அவர்கள் அது தேசிய நோய் ,இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உள்ளது. நம் தாய் உணவுகளான சிறுதானியங்களை மறந்து,கருப்பு அரிசியை வர்ணபேதம் காட்டி பட்டைத்தீட்டி வெள்ளையாக்கி உண்பதன் விளைவு இந்திய மக்கள் அனைவருக்கும் வெள்ளைத்தந்த பரிசு சர்க்கரை நோய் என்றார்.

இலக்கியங்கள் சமூகத்தைஉயர்த்தும்,உயிர்ப்பிக்கும் கருவி...எனப் புகழ்ந்து  தூப்புக்காரி எழுதியதால் மலர்வதியின் சமூகம் தற்போது பேசப்படுகின்றது என்றும் சவரம் செய்யும் கவிஞரின் நூல் குறித்தும் பேசி அவர்கள் தற்போது உயர்வடையத்துவங்கி உள்ளார்கள் எனவும் உணர்வுடன் அவர் பேசிய போது அரங்கமே அமைதியாக அவரின் பேச்சில் மயங்கியது. கவிஞர் பொன்னையா அவர்கள் நன்றிக்கவிதை வாசிக்க விழா இனிதே நிறைவுற்றது.



4 comments:

  1. வாழ்த்துக்கள் அக்கா...
    படிக்கும் காலத்தில் எனது கவிதையைப் பாராட்டி திரு. பொன்னீலன் அவர்கள் எழுதிய கடிதம் இன்னும் பத்திரமாய்.
    எனது பேராசான் திரு. மு.பழனி இராகுலதாசன் மூலமாக இவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தில் மிகச்சிறந்த ஆளுமை...
    அவரோட அளவளாவி அவர் முன்னே விருதும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    இப்படியான பரிசுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...