Saturday, 14 March 2015

தேரை


எப்போதும் எனைப் பிதுங்கிய
விழிகளால் அச்சுறுத்துகின்றது
வீட்டில் சுதந்திரமாய் நுழைந்து..

அச்சத்துடனே நுழைகின்றேன்
அழையா விருந்தாளியினை எண்ணி..

புத்தகத்தின் மீதமர்ந்து வாசிக்கவும்
சமையலறைக் கதவருகில் உண்ணவும்
வண்டியின் மீதமர்ந்து பயணிக்கவும்
ஆசைப்பட்டே நுழைந்திருக்கவேண்டுமது...

அஞ்சியே  எட்டிநின்று போ,போவென்க
பாய்ந்து பாய்ந்து பயமுறுத்துவதற்காக
பீச்சியடிக்கும் தண்ணீரைகண்டு அருவறுத்தே
பதறுகின்றேன்..

இருக்கும் இடத்திற்கேற்ற
வண்ணம் கொண்டு அட்டையென
ஒட்டி மெல்ல ஒதுங்குமது
என்னுடன் விளையாட...

தினம் தினம் போராட்டமான
விளையாட்டுதான் விரட்டும் வரை

கல்லுக்குள் காலமெல்லாம் உறங்குமென
காதுக்குள் ரகசியமாய்க்  கூறி
சிறுவயதில் நான் உணவருந்த
சின்னஞ்சிறு கயிற்றில் கட்டி
தொங்கவிட்டு துன்புறுத்தியதாகக்
கூறிய மாமாவை விட்டுவிட்டு
எனை மிரட்ட வந்ததுவோ...


3 comments:

  1. மிரட்டவே வந்திருக்கலாம்.

    ReplyDelete
  2. வணக்கம்
    வரிகள் ஒவ்வொன்றையும் இரசித்து படித்தேன் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ///கல்லுக்குள் காலமெல்லாம் உறங்குமென
    காதுக்குள் ரகசியமாய்க் கூறி///
    பெரியக் கோயில் நந்தி கூட,
    தேரையால் வளர்ந்தது என்ற
    கதை நினைவிற்கு வந்தது
    நன்றி சகோதரியாரே
    தம +1

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...