Tuesday, 6 January 2015

குழந்தைகளுக்கு மதமில்லை..

குழந்தைகளுக்கு மதமில்லை..

இன்று 7 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் ந.பிச்சமுர்த்தி எழுதிய பொங்கல் வழிபாடு செய்யுள் வகுப்பு...பொங்கலைப்பற்றி கூறி இன்று வகுப்பில் கொண்டாடலாம் எனக்கூறியிருந்தேன்..

ஒரே ஜேஜேன்னு பரபரன்னு ஓடியாடியபடி இருந்தனர்.பள்ளியில் இருந்த அனைத்து ஆசிரியர்களையும் அழைத்துள்ளனர்..நானறியாமலே...ஒரு வழியாக நான் உள்ளே நுழைந்த போது கோலமிட்டு.வாழையிலையில் தேங்காய், வெற்றிலை,பாக்கு, பூ,பழம் வைத்து வகுப்பறையையே வீடாக மாற்றியிருந்தனர்.கரும்பலகையில் பொங்கல் பானைகள்...கரும்புடன் திகழ ...நான்கு பாத்திரங்கள் நிறைய  சர்க்கரைப்பொங்கல் நிறைந்து வழிந்தது..ஏதும்மா எனக்கேட்டதற்கு வீட்டிலேயே செய்து கொண்டுவந்துவிட்டோம் மிஸ் என்றார்கள்...


சூரியனுக்கு படைத்து...6ஆம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு குழந்தைகள் அனைவருக்கும் சர்க்கரைப்பொங்கல் வழங்கி என வகுப்பே கலகலன்னு இருந்தது...இதில் அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடாமல்.இருந்தனர்..அவர்களுக்கு கொடுத்த பின் இத்தனை சுவையாக பொங்கலைக்கொண்டு வந்தவர்கள் யார் யார் எனக்கேட்க ...
என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆயிஷா பேகம்,ஜாஸ்மின் பாத்திமா,ரகுமத்நிஷா,சிவப்பிரியா ஆகிய குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கேட்டதற்கு மறுக்காமல் செய்து தந்திருந்தார்கள்.அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

என்ன சொல்வது..குழந்தைகள் மதம் ,சாதி பார்ப்பது இல்லை..

எத்தனை உயர்ந்த குணங்களோடு இருக்கும் குழந்தைகளை சமூகம் எப்படி மாற்றி விடுகின்றது..?

7 comments:

  1. சாதிகள் இல்லையடி பாப்பா
    இது நமக்கல்ல பாப்பாக்களுக்கு மட்டுமே...80 உண்மைதானோ....

    ReplyDelete
  2. இனிய அனுபவமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. மதம் சாராத பண்டிகை
    தமிழர் திருநாள் பண்டிகையான
    "தைப் பொங்கல்" என்பதை மழலைகளின் மதமில்லாத
    மணம்வீசும் மங்கலப் பொங்கல் செய்தி இனித்தது சகோதரி!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. மதம் பார்க்காது பொங்கல் செய்து கொடுத்த உள்ளங்களைப் பாராட்டுவோம்...

    ReplyDelete
  5. அச்சச்சோ அவர்களுக்கு பொங்கல் இல்லையா:((( அதனால் என்ன அவர்களே ஸ்வீட் குட்டீஸ் தானே;))))

    ReplyDelete
  6. முடிவில் கேள்வி சிந்திக்க வேண்டியது...? !

    ReplyDelete
  7. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள்! சிறப்பான பதிவு! நன்றி

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...