Tuesday, 20 January 2015

உறக்கம்

இளஞ்சூடான மெத்தையில்
இதமாய் போர்வைக்குள்
புதைகையில்......

வழியில் சாக்கடையில் நனைந்து
வாலைச்சுருட்டி படுத்திருந்த
நாய்க்குட்டியின் முனகலும்

நடைபாதையில் நடுங்கி உறங்கும்
குழந்தையின் முனகலும்
 இம்சிக்கின்றது தூங்கவிடாது...

நரம்பில் ஊடுறுவும் குளிரென...

18 comments:

  1. சாலைக்காட்சிகள் தூங்க விடாமல் செய்வதை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  2. கவிதை அருமை......மனதை உலுக்கிவிட்டது! வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. மாறாத காட்சிகள்..சகோ...

      Delete
  3. மனம் கணத்தது நிஜமான காட்சிகளே....

    ReplyDelete
  4. சாலைக் காட்சி
    மனதை கனக்கச் செய்யும்
    தங்களின் வரிகளும் அப்படியே
    தம 2

    ReplyDelete
  5. உணர்வு மனிதம்

    ReplyDelete
  6. Replies
    1. நன்றி த.ம.விற்கு

      Delete

  7. வணக்கம்!

    வாடிய புல்கண்டு வாடிய வள்ளல்போல்
    பாடிய பா..கண்டு பாரதிநான் துன்புற்றேன்!
    பாதைச் சிறுவன்! பசிக்கொடுமை! என்னுடைய
    காதை அடைக்கும் கனத்து!

    தமிழ்மணம் 4

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  8. வறுமை வளையம் வளைந்தது காண்!
    சிறுமை சீர் அழிந்தொழியாதது ஏன்?
    பெருமை கொள்ளும் பெருச்சாளி உலகம்
    உரிமை இழக்கும் செத்தொழிந்து!
    இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...