Wednesday, 31 December 2014

2015

2015
இன்று பிறந்தாய்
இனிமையாகவே வளர்..
குருதி மறுத்து
அன்பு குடித்து வளர்...

போதும் சென்ற ஆண்டு
பலி கொடுத்த உயிர்கள்
பாலியல் வன்முறையிலும்
துவக்குகளின் ருசியிலும்
பிஞ்சுகளை இழந்தோம்
செல்லும் முன் கூட
காற்றில் பறந்த உயிர்களை
கடலில் கரைத்துக் குடித்தாய்

மனித மனதின்
வக்கிரம் துடை
இயந்திரமான மனங்களை
மனித நேயமாக்கு
மதங்கள் கடந்து
மனிதம் நேசிக்க கற்றுக்கொடு.

வாழ்க புத்தாண்டே..

12 comments:

  1. அன்பு குடித்து வளர்..//
    தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம்நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மதங்கள் கடந்து மனங்கள் இணைந்து புத்தாண்டை வரவேற்போம்

    ReplyDelete
  4. //மதங்கள் கடந்து
    மனிதம் நேசிக்க கற்றுக்கொடு// மிகத் தேவையானது..
    அருமை கீதா

    உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :)

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD...

    ReplyDelete
  6. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

    2015 ஆம் ஆண்டினை அன்புடன் வரவேற்ற உங்கள் கவிதை வரிகளுக்கு நன்றி!
    த.ம.4

    ReplyDelete
  8. புத்தாண்டாவது நமது அனைவரது வாழ்விலும் வளமையை தரட்டும்..
    இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அருமையான சிந்தனை அக்கா! வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. மனித மனத்தின் வக்கிரம் துடை..... நல்ல வேண்டுகோள்......

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...