Monday, 10 November 2014

.9.11.14 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா

 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா

புதுக்கோட்டையில் உள்ள நில அளவையர் அரங்கில்  09.11.14 அன்று
  இனிய பனி சூழ்ந்த மாலைப்பொழுதில் ஒரு கோப்பை மனிதம் அறிமுக விழா துவங்கியது .

தமிழ்த்தாய் வாழ்த்து

 கவிஞர் மகா.சுந்தர் அவர்களின் மகள் சுபாஷிணி இசைக்குயிலாய் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

வரவேற்பு

தமிழாசிரியர்.கிருஷ்ணவேணி தனது இனிய தமிழால் அனைவரையும் வரவேற்றார்.

அடுத்து விருந்தினர்களை சிறப்பிக்கும் முகத்தான் அவர்களுக்கு நூல்கள் பரிசளிக்கப்பட்டன.



இசைக்குயில் சுபாஷிணி

காற்றில் வரும் கீதமே என்ற பாடலைப்பாடி அனைவரின் மனதையும் வசப்படுத்தினார்.


நூல் அறிமுகம்

 முதலில் கவிஞர் மகா.சுந்தர் நூலை அறிமுகப்படுத்தினார்...
 நூலில் உள்ள கவிதைகள் சில மயிலறகாய் ,சில பனிக்கட்டியாய்,சில அனலாய்...சமகால பிரச்சனைகளைக்கூறுவதாய் அமைந்துள்ளன என பாரட்டி சிறப்புடன் அறிமுகம் செய்தார்..


 கவிஞர் .நீலா

 தனது அறிமுக உரையில் சமீப கால பிரச்சனைகளாக த.மு.எ.க.ச கருதுபவைகளை தனது பாடுபொருளாக கொண்டு இக்கவிதைகளை கீதா எழுதியுள்ளார்.பெண்களின் வலிகளைப் பெண்களால் தான் கூற முடியும் என்று கூறி தனக்குப்பிடித்த கவிதைகளைக்கூறி  சிறப்பாக அறிமுகம் செய்தார்.

 கவிஞர் சுரேஷ் மான்யா

 தனது அறிமுகத்தில் கவிதையின் ஊடே இருக்கும் இசைத்தன்மையை உணர முடிந்தால் அது சிறந்த கவிதையாகும் என கூறி நூலில் உள்ள தமிழ் வார்த்தை தேர்வுகள்,கவிச்சொற்களையும் அறிமுகம் செய்து சிறந்த திறனாய்வுப்பார்வையுடன் நூலை  அறிமுகம் செய்தார்.



எனது சகோதரியும் பேராசியருமான முனைவர் கண்மணி

 தனது அறிமுகத்தில்  பெண்களுக்கு நட்பை தொடர்வது இயலாத சூழ்நிலையில் விடுமுறை நாளில் இத்தனை பேரும் வந்து கூடியிருப்பது மிக்க மகிழ்ச்சி என கூறி பெண்ணியம் சார்ந்த கவிதைகளை  சிறப்புடன்அறிமுகம் செய்தார்.


 பாடல்
அழகு எனத்துவங்கும் சைவம் திரைப்பட  பாடலை சுபாஷிணியும் அவரது சகோதரி கீர்த்திகாவும் விழாவிற்காகவே பயிற்சி செய்து பாடி  விழாவிற்கு மெருகூட்டினர்...


பாராட்டுரை
புதுகையின் தலைசிறந்த இலக்கியவாதியான சொல்லின் செல்வர்
ரா.சம்பத்குமார் அவர்கள் நூலில் உள்ள ஒவ்வொரு கவிதையும் தரும் பல்வேறு கோணங்களை மிகச்சிறப்பாக எடுத்துக்கூறிய போது எனக்கே என் கவிதைகளை அறிமுகப்படுத்தியது போலவே இருந்தது..
 தலைமை உரை

தனது காந்தக்குரலால் மனங்களை வசீகரம் செய்யும் புதுக்கோட்டையின் சிறப்பு மிக்க கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் நூலின் சிறப்புகளைக்கூறும் பொழுது, எனது முதல் நூலான விழி தூவிய விதைகளுக்கு அணிந்துரை வழங்கிய விதத்தையும் இரு நூல்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும் கூறி நூலின் சிறப்புகளை எடுத்துக்காட்டி கேட்போரின் மனதில் நூலைப்பதிய வைத்து வாங்கவும் வைத்தார்.

 சிறப்புரை

புதுகையின் சிறப்பு மிக்க பேச்சாளரும், கவிஞருமான சகோதரர் முத்துநிலவன் அவர்கள் ..ஆண்களே கையாள அஞ்சப்படும் பாடுபொருளான சாதீயம் குறித்த கவிதைகளை எழுதியுள்ளார் என்று பாராட்டினார். சிறந்த கவியாகத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி சிறப்புரையை சிறப்புடன் அளித்தார்.



ஏற்புரை
நான் கவிஞராக எனக்கே என்னை அறிமுகம் செய்த புதுக்கோட்டையில் எனது வளர்ச்சிக்காரணமானவர்களைப்பற்றி கூறி நூல் உருவான விதம் பற்றிக்கூறினேன்.



நன்றியுரை

என்னுடன் பணிபுரியும் நல்லாசிரியர் கலையரசி அனைவருக்கும் நன்றி கூறினார்.


நிகழ்ச்சித்தொகுப்பு
கவிஞர் கா.மாலதி அவர்கள் விழாவை தனது சிறந்த தொகுப்புரையால் சீர்மையுடன் நடத்தினார்.

தோழியர் ஜெயலெட்சுமி, கீதா ,விஜயலெட்சுமி,நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த மாலதி..


என் மேல் கொண்ட அன்பால் ஆர்வமுடன் வந்து விழாவில் கலந்து கொண்டு  சிறப்பித்த  ஆண்களும் பெண்களும் சரிசமமாக நிறைந்த அரங்காக நிறைந்து விளங்கியது விழா அரங்கு.ஒவ்வொருவரும் தனது விழாவாக எண்ணியே செயல்பட்ட ,என் உயர்வுக்குக் காரணமான  தோழமைகளால் நடத்தப்பட்ட விழா  இன்னும் பசுமையாக மனதில் ஓடிக்கொண்டுள்ளது என கலந்து கொண்டோர் அலைபேசி மூலம் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டே உள்ளனர்.இவ்விழாச் சிறப்பாக நிகழ அனைவரும் எனக்கு ஒத்துழைத்தனர்.மனம் நிறைந்த விழாவாக ஒரு கோப்பை மனிதம் நூல் அறிமுக விழா இனிதாக நாட்டுப்பண் பாட நிறைவுற்றது.
















32 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  2. வாழ்த்துகள் கீதா, அறிமுக விழா இனிதே நடந்தது பதிவில் தெரிகிறது, மிக்க மகிழ்ச்சி கீதா. அறிமுக விழாவிற்கு முன் பதிவிட நினைத்த கிரேஸ் பருகிய ஒரு கோப்பை மனிதத்தின் இனிமை விரைவில் வருகிறது..வருகிறது..வரு..கி..ற..து..
    :))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா எதிர்பார்த்ததை விட சிறப்பாய் அமைந்து விட்டது...வரட்டும்... ரட்டும்...ட்டும்...டும்..ம்

      Delete
  3. Eniya vaalththukal sis..
    Vetha.Langathilakam

    ReplyDelete
    Replies
    1. நன்றி பா...ஆமா பயணம் முடிந்ததா?

      Delete
  4. மீண்டும் புதுக்கோட்டையில் ஒரு இலக்கிய வட்டம். சிறப்பாக நடைபெற்ற உங்கள் நூலின் அறிமுக விழாவைப் பற்றி இந்த பதிவும் படங்களும் சொல்லுகின்றன. வர இயலாமல் போய் விட்டது. வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்...மிகச் சிறப்பாய் நிகழ்ந்தது...நன்றி சார்

      Delete
  5. வாழ்த்துக்கள் புகைப்படங்களை அமர்க்களப்படுத்தி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சகோதரி ஆச்சே ...நன்றி

      Delete
  6. பதிவு கலக்கலா வந்திருக்கு அக்கா!

    ReplyDelete
    Replies
    1. உன் அக்கால்ல...இது கூட இல்லன்னா எப்படிம்மா?

      Delete
  7. புகைப் படங்களே விழாவின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றன சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நிறைவான விழாவாய் நேற்றைய விழா..அண்ணா...இங்கு உள்ளவர்களின் ஒத்துழைப்பும் ஒரு காரணம்...நன்றி

      Delete
  8. வணக்கம் சகோதரி.! நிலவன் அய்யாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்குப் பின் நடந்த,மனதிற்கு நிறைவான ஒரு விழா!
    உங்களின் அன்புக்கும்,நேர்மையான அணுகுமுறைக்கும்,கவியுள்ளத்திற்கும் கிடைத்த வெற்றி இது! .
    நீங்கள் செல்லும் திசையெல்லாம்,வெல்லும் திசையாக வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்..சுபாஷிணியின் பாடலும் நிறைவிற்கு ஒரு காரணம்...மிக்கநன்றி..உங்களைப்போன்றவர்களின் ஊக்குவிப்பு என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றது.நன்றி.

      Delete
  9. உங்களையெல்லாம் நினைக்கவே அத்தனை
    பெருமையாக இருகின்றது சகோதரி!

    சாதிப்பதற்கெனவே பிறந்தவர்கள் நீங்களெல்லாம்!

    பதிவும் படங்களும் பார்த்து மெய் சிலிர்த்து கண் உகுத்தேன் மகிழ்ச்சியில் நான்..!

    வந்து கருத்திடக்கூட எனக்கெல்லாம் இங்கு என்ன உண்டு என நினைக்கின்றேன்!
    எங்கோ எட்டா உயரத்தில் நீங்களெல்லாம்..!
    இன்னும் சிறக்க உளமார வாழ்த்துகிறேன் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. ஏன்மா இப்படி.நான் மிகச்சாதாரணமானவள்...நேற்றைய நிகழ்வு நிறைவாயிருந்தது உண்மை தான்..நீங்கள் என்னைவிடச்சிறந்தவர் என்பதில் எந்த ஐயமுமில்லைமா..நன்றி

      Delete
  10. என்னை யாராவது புதுக்கோட்டைக்கு அழைத்துச் செல்லுங்களேன்.....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என் மனதில் என்னோடு புதுக்கோட்டையில் தானேம்மா இருக்கீங்க....கவலை வேண்டாம்...மா

      Delete
  11. பாதிக்குப் பாதி பெண்கள் கூட்டம் என்பது நான் இதுவரை காணாத புதுமை! கீதாவின் அன்பின் வரவு அது. இலக்கிய உறவுகள் பலரைப் புதிதாகப் பார்க்க முடிந்ததும், இடம்போதாமல் வெளியில் இருக்கை போடடு அவ்வளவு நேரம் இருந்ததும் சிறப்பு. அடுத்த போட்டி எப்போ?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் நாளில் சார்.....இலக்கிய கூட்டத்திற்கு புதியவர்கள் அனைவரும்..மிகவும் ரசித்ததாக அலைபேசியில் சொல்லிக்கிட்டே இருக்காங்க...சார்

      Delete
  12. வாழ்த்துக்கள் சகோதரி...
    தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்...
    கணமணி எங்கள் ஆசிரியரின் மகள். அவரும் வந்திருந்து வாழ்த்திப் பேசியிருப்பது மகிழ்ச்சி.,..
    மற்றபடி வாழ்த்திய அனைவருமே புதுக்கோட்டையின் முத்துகள்தான் என்பதை அறிவோம்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி...அருமையான நிகழ்வாய் அமைந்தது.

      Delete
  13. நூலறிமுக நிகழ்வை
    நேரில் பார்த்தது போல
    சிறப்பான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்.

      Delete
  14. வாழ்த்துக்கள். தாங்கள் மென்மேலும் பல நூல்களை எழுத இதுபோன்ற விழாக்கள் துணை செய்யும். விழாவில் நேரில் கலந்துகொண்டது போன்ற உணர்வைத் தங்களின் பதிவு ஏற்படுத்தியது. நன்றி.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் சகோதரி. புதுகை மாவட்டத்தைச் சேர்ந்தவனாய் இருந்தும், அங்கே வசிக்க இயலாதவனாய் இருப்பதன் வலியை உணர்கிறேன்

    ReplyDelete
  16. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...