Sunday, 16 November 2014

கனவில் வந்த காந்தி -8





நல்லவேளை நான் தப்பிச்சேன்னு மைதிலி பதிவு,முத்துநிலவன் அண்ணா பதிவ படிச்சுட்டு கரந்தை அண்ணா பதிவப்பார்த்தா ஆத்தாடி 5 ஆவது ஆளா நானு...வேலு நாச்சியாரா பயப்படுவாள்னு  துணிஞ்சிட்டோம்ல..நினச்சத எல்லாம் பேசலாம் கனவிலதானே..இனி உங்கப்பாடு





01.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?



அப்படின்னு ஒண்ணு இருக்கான்னேன்...அப்ப..நீங்க எங்க பிறப்பீங்கனு கேட்டுட்டு நான் தமிழ்நாட்லதான் பிறக்கனும்னு சொல்வேன்..அவர் நிச்சயமா இந்தியான்னு சொல்லவே மாட்டாரு இப்ப இருக்குற நிலைமையப்பார்த்தா...ன்னு சொல்லிட்டு ஏன் தாத்தா எங்க வீரத்த எல்லாம் அஹிம்சைனு சொல்லி கிள்ளி எறிஞ்சுட்டீங்குன்னு கேட்பேன்..

   02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
 

சக்கப்போடுதான் கன்ணுக்குக்கண் பல்லுக்குப்பல் தான் குடுக்குற குடுல தப்பு பண்றவன் எல்லாம் துண்டக்காணும் துணியக்காணும்னு ஓட வைக்கனும் ...அன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் பாதுகாப்பா இருக்குற மாதிரி கண்டவுடன் கேள்வியே இல்ல..தண்டனைதான்...ஆமா எல்லோருக்கும் வாய்ப்புன்னு கடைகோடி மக்கள் வரை ஒரு நாள் ஆட்சியாளரா இருக்க ஒரு சட்டத்தைப்போட்டுட்டு ஒரு தடவைக்கு மேல் யாருக்கும் பதவியே கிடையாதுன்னு சும்மா நச்சுன்னு ஒரு சட்டத்த போட்டுடலாம்ல...அப்படிய்யே டாஸ்மார்க்கு பூட்டுட்டுட்டு....

03.   இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?  


அங்கிய்யே இரு இங்க வராதேன்னு சொல்லிடுவேன் ..ஆனா நாடு திருந்தனும்னு அவங்களும் ஏத்துப்பாங்க...அவங்களும் ஆட்சியில வர வாய்ப்பு கொடுத்துருக்கோம்ல..


04.   முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?


இருக்கே அனாதைக்குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரு முதியவரை தத்து எடுத்துக்கச்சொல்லிடுவேன்...அவர்கள் தேவைகளை அரசே பார்த்துக்கும்.எப்பூடீடீ...



05.   அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?


இது கொஞ்சம் கஷ்டமாருக்கே..ம் ம் ம் என்ன திட்டம்...அரசியலுக்கு முன்பு எப்படி எங்கு இருந்தார்களோ அப்படியே ஆகட்டும்னு சொல்லி அவங்க ஊர தத்து எடுத்துக்கச்சொல்லிடுவேன்...அடிப்படை வசதி செய்து கொடுக்கலன்னா மக்களே அவுகள பாத்துக்கச்சொல்லிடுவேன்ல.

06.   மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?


மதிப்பெண்ணே கிடையாது...போங்க..

07 விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?


இருக்கே மனுசன் மனித நேயத்தோட வாழ ஏதாச்சு கண்டு பிடிக்க சொல்வேன்..கண்டு பிடிக்கலன்னா போதும்பா உங்க கண்டுபிடிப்பால பூமி அழிஞ்சதுதான் மிச்சம் .ஆணியே பிடுங்க வேண்டான்னு வடிவேலு பாணில சொல்லிடுவேன்..












08.   இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் 



செய்வார்களா?     

செய்வாங்க ஏன்னா..ஒரு நாளைக்கு ஒருத்தர் அவனவன் சுருட்டுற வழிய பாக்க இத கவனிக்க நேரம் இருக்காதுல்ல..

 09.   மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?






1[பிள்ளைகளை கவனிக்காத பெற்றோரும்,பெற்றோரை கவனிக்காத பிள்ளைகட்கும் கடுமையான தண்டனைதான்.

2]குழந்தைகள் விரும்பும் கல்வியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை.

3]சமூக அக்கறை இல்லாத தகவல் ஒளிபரப்பு சாதனங்களுக்குத்தடை

4]பள்ளி,கல்லூரி முடித்ததும் பணி புரிந்து கொண்டே படிக்கும் வாய்ப்பு ஊதியமாகக் கல்விச்செலவை அரசே ஏற்கும்.

5] இந்தியாவுல இருக்குற பெரும் பணக்காரங்க எல்லாம் ஆளுக்கு ஒரு மாவட்டத்த தத்து எடுக்கசொல்லிடுவேன்ல..

6]உலகில் ஒற்றுமையாக வாழும் நாடுகள் தான் செல்வமிக்க நாடுன்னு ஒரு அறிவிப்பு விட்டா அமெரிக்கா பக்கம் ஒரு ஆளு இருப்பாங்க...இந்தியா தான் செல்வமான நாடுன்னு பேர் வாங்கிடும் நாம தான் யாரையும் எதிர்த்து பேசமாட்டோம்ல..

ஆத்தாடி வளவளன்னு வருதே போதும் தாத்தான்னு சொல்லிடுவேன்.



10.   எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?  

வேண்டவே வேண்டான்னு சொல்லிடுவேன்..அதையும் மீறி எடுக்கனும்னா கடவுளா பிறக்கனும்னு சொல்லிடுவேன் .கொடுப்பாரு...?

இனி யார் கனவில காந்திய வரச்சொல்லலாம்..என்ற யோசனையில்

1]இளமதி இளைய நிலா-http://ilayanila16.blogspot.in/2014/11/blog-post_2.html

2]காரஞ்சன் சிந்தனைகள்-http://esseshadri.blogspot.com/2014/11/blog-post_16.html

3]இமாவின் உலகம்-http://imaasworld.blogspot.in/2014/11/blog-post_14.html

4]தமிழ்வாசி பிரகாஷ்-http://www.tamilvaasi.com/2014/11/TOP-TEN-YOUTUBE-FREE-DOWNLOADER.html

5]வி.சி.வில்வம்-http://vilvamcuba.blogspot.in/2014/11/blog-post.html

6]கீதமஞ்சரி-http://geethamanjari.blogspot.in/2014/11/blog-post.html

7]அருணாசெல்வம்-http://arouna-selvame.blogspot.com/2014/11/blog-post_11.html

8]கோவை ஆவி-http://www.kovaiaavee.com/2014/11/three-angels.html

9]உஷா அன்பரசு-http://tamilmayil.blogspot.com/2014/11/blog-post.html

10]திடங்கொண்டு போராடு-http://www.seenuguru.com/2014/11/OMR.html

அப்பாடி இனி அவங்கபாடு...ஆமா கில்லர்ஜி சகோ ஏன் இப்படி...?ஆனாலும் ரசனையாத்தான் இருக்கு நன்றி

23 comments:

  1. கேள்விகளை அப்படியே என் தளத்தில் இருந்து காப்பி அடித்து இருந்தாலும் ,பதில்களை சரியா சொல்லி இருப்பதால் நீங்கள் பாஸ் ::)
    தமிழ்மணத்தில் பதிவை சேர்த்து விடுங்க ,வோட்டு போட்டு விடுகிறேன் ,நான் பேச்சு மாறாதவன் :)

    ReplyDelete
  2. ஆஹா சார் ..பதில காப்பி அடிக்கலயே...கேள்வி கேட்டே பழகுனவகிட்டயே கேட்டு பதில் கூற வச்சுட்டாங்களேனு ஆச்சர்யமாருக்கு...உங்களுக்கு டீ போட்டு தந்துடுறேன் பதிலுக்கு ...டீலா நோ டீலா..

    ReplyDelete
    Replies
    1. டீல்தான்,,த ம 4 வாக்களிச்சுட்டேன் :)

      Delete
  3. அருமை சகோதரி.. சூப்பரா பதில்கள்
    சட சடன்னு போட்டுத்தள்ளீட்டீங்க...:)
    நன்றாக இருக்கு! வாழ்த்துக்கள்!

    ஆமா... என்னைய பார்த்தா பாவமா இல்லியா உங்களுக்கு..:(
    ஏன்ன்ன்.. ஏன்மா என்னயும் இங்கை சேர்த்துவிட்டிருக்கீங்க..:)

    முத்து நிலவன் ஐயாவும் ஏற்கனவே சொல்லிட்டாரு..
    இப்போ நீங்களுமா?..அவ்வ்வ்வ்வ்..:) என்ன செய்வேன்....!

    சரி.. ஏதாவது யோசனை பண்ணுவோம்...:))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நிலவன் அண்ணா போட்டத பாக்கலயே,,ஆனாலும் பின்னிடுவீங்கதானே

      Delete
  4. கனவில் வந்த காந்திக்கு மறுமொழி அழகாய் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  5. அம்மாடி!!! இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஒரு சிரிப்பா சிரிக்குதே நெட்டு:))) சச்சின் ஸ்டைல அடிச்சு ஆடிருகீங்க அக்கா!! தூள்!! 2,7, 8 எல்லாம் செம சூப்பர்!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா உங்கிட்டயே பாராட்டு வாங்கிட்டனே ஜாலிஜாலி

      Delete
  6. கடவுளாகவே பிறக்கப் போகிறீர்களா
    சபோஷ்
    அருமையான பதில்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா த.மவிற்கும்

      Delete
  7. வளவளன்னு வந்தாலும் பதில்கள் நல்லா இருக்குங்க...!

    ReplyDelete
  8. சுவையான பதில்கள்! நன்றி!

    ReplyDelete
  9. ஒருவழியா சமாளிச்சிட்டீங்க டீச்சர்!
    த.ம.3

    ReplyDelete
  10. ஆஹா பதில்கள் அழகாக எதிர் பார்த்தேன் அதுவும் நகைச்சுவையாக உங்களிடமிருந்து,,,,, ஆச்சர்யமாக இருக்கிறது வாழ்த்துக்கள் இரண்டாவது பதிலை நான் கணித்தது 100 க்கு 100 சரி இப்படித்தான் உங்களிடமிருந்து வருமென்று காரணம் ‘’ஒரு கோப்பை மனிதம்’’ படித்து முடித்து விட்டேன் அதனைக்குறித்து..... எழுதுகிறேன், இல்லை எழுதியும் விட்டேன் வெளியிடுகிறேன் விரைவில். எனது பதிவுக்கு வராவிட்டாலும் என்னையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் நன்றி.

    ReplyDelete
  11. நகைச்சுவையாய் இருந்தாலும் சிந்திக்க வைக்கும் பதிவுகள்...
    அருமை... வாழ்த்துக்கள்.
    ஒரு கோப்பை மனிதம் கில்லர்ஜி அண்ணனிடம் இருக்கா? அப்ப இந்த வார இறுதியில் சந்திக்கும் போது வாங்கிப் படிக்கிறேன்...

    ReplyDelete
  12. அய்யோ அம்மா... ரெண்டாவது பதில்... அதிரடி! (ஏந்தங்கச்சி..இந்தக் கொலவெறி..?)
    9,10ல இந்த அண்ணன் சாயல் தெரியுதே?
    சாயல்தான்.. மத்தபடி சிந்தனைகள் சரவெடி.
    சபாஷ்!சரியான பதில்கள்..(பி.எஸ்வீரப்பா குரலில் படிக்க)

    ReplyDelete
  13. அடி தூள் கிளப்பிட்டீன்களே செமையா குடுத்தீங்கடா பதில் துண்டைக் காணோம் துணியை காணோம் ஹா ஹா ...அப்போ கனவில வந்த காந்தியும் துண்டைக் கா னோம் துணியை காணோம் என்று ஓடியிருப்பான்க் இல்ல ...நகைசுவை என்றாலும் சிந்திக்க வைக்கும் பதில்கள் ...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...