Friday, 14 November 2014

14.11.14 குழந்தைகள் தின விழா






குழந்தைகளோடு குழந்தையாய் எங்கள் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில்
என் வகுப்பில் பவித்ரா சற்று மனவளர்ச்சி குன்றியக்குழந்தை .எல்லோரிடமும் முரட்டுத்தனம் காட்டுபவள்..எழுதுவாள் படிக்கத்தெரியாது..அவள்.பள்ளியில் சேர்ந்த பொழுது...அடிக்கடி அவளைசீண்டி எல்லா குழந்தைகளும் அவளைத்துன்புறுத்தி ரசிப்பார்கள்...எனது அறிவுறுத்தல்களுக்குப்பின் இப்போது குறைந்துள்ளது...அன்பாலும் ,பாராட்டுதல்களாலும் இப்போது படிக்க ஆரம்பித்துள்ளாள். ,மற்றக்குழந்தைகளுடன் இணைந்து செயல்படுகின்றாள்..நான் காட்டும் அன்பை என் வகுப்புக்குழந்தைகள் அனைவரும் அவள் மீது காட்டுகின்றனர்...நேற்று குழந்தைகளோடு குழந்தையாய் ஆசிரியர்களும் ஆடிப்பாடி மகிழ்ந்த நேரத்தில் அவளும் வந்து ஆடியது மனதிற்கு நெகிழ்வாய் ,மகிழ்வாய் இருந்தது....குழந்தைகள் குழந்தைகளாய் இருப்பது எத்தனை மகிழ்வான ஒன்று.. 

11 comments:

  1. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
    குழந்தைகளை ரசிக்கத்தெரியதவன்(ள்) மனிதவடிவில் உள்ள பிண்டமே,,,

    ReplyDelete
  2. பார்த்தேன். படித்தேன். ரசித்தேன்.

    ReplyDelete
  3. மனசெல்லாம் பூத்தது சகோதரி!
    மிக அருமை! செல்வங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

    பகிர்விற்கு நன்றி மா!

    ReplyDelete
  4. மிக நல்ல பதிவு! குழந்தைகள் என்றாலே குதூகலம் தானே! ரசித்தோம்!

    ReplyDelete
  5. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  6. நெகிழ்வாய் ,மகிழ்வாய் ஒரு பகிர்வு..!

    ReplyDelete
  7. நல்ல விடயம் தோழி மாணவர்களின் மனது, தாய்க்குப்பின் அதை முழுவதும் உணர்ந்தவர்கள் நாம்தானே நல்லது செய்தீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. ஜன்னல் ஓரத்தில் சிறுமி- டோட்டோ சான் பள்ளியில் , மாற்றுத்திறனாளி குழந்தையை பிள்ளைகள் எல்லாம் ஏணிப்படியாய் நின்று மரத்தில் ஏற்றியது ஞாபகம் வந்தது, இந்தப் பதிவைப் படித்தவுடன். வாழ்த்துக்கள் தோழியரே, ஆசிரியராய் மனதார விரும்பி பணியாற்றும் வாய்ப்பு - மிக்ப்பெரிய கொடை வாழ்வில். வாழ்த்துக்கள் தோழியரே, குழ்ந்தைகளுக்கும் , வழி நடத்தும் குழ்ந்தைகளுக்கும் - குழ்ந்தைகள் தின நாள் வாழ்த்துக்கள். முனைவர் .வா. நேரு, மதுரை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...