Monday, 27 October 2014

ஒரு கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா

ஒரு கோப்பை மனிதம் நூல் வெளியீட்டு விழா

குடும்ப விழா போல இருந்தது நூல் வெளியீட்டு விழா..

                    26.10.14 ஞாயிறு மதுரையை நோக்கி   காலை 7.30 மணி அளவில் வானம் மழைத்தூவி வாழ்த்த...வலைப்பூ சந்திப்பு நிகழ்ச்சிக்கு துவங்கியது பயணம்..முத்துநிலவன் அண்ணா மற்றும் சகோதரி மல்லிகா,சகோ கஸ்தூரிரங்கன் ,தங்கை மைதிலி,நிறைகுட்டி,தோழி ஜெயலெக்ஷ்மி,கவிஞர் நீலா,தோழி மாலதி,தோழர் ஸ்டாலின்,கவிஞர் மகாசுந்தர்.,இவர்களுடன் அனுசுயாவும், நானும்....நெருக்கடியான ஆனால் இனிமையான ,மறக்க முடியாத பயணமாய்...!

                  போகும் வழியில் கலைநயமிக்க  உணவுவிடுதியில் உரிமையோடு நான் தான் காலை உணவுச்செலவை பகிர்ந்து கொள்வேன் என்று சகோதரி ஜெயா அனைவருக்கும் உணவளித்தார்கள்.மீண்டும் துவங்கியது பயணம்..மதுரையை நோக்கி...!

                 காலை 10.30 மணியளவில் விழா நடக்கும் இடத்திற்குச் சென்றோம் வலைப்பதிவர் அறிமுக நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது...வலைப்பூவில்  கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்த தோழர்களை நேரில் பார்த்து பேசியது மனம் நிறைவாக இருந்தது.தோழி கிரேஸ் குடும்பம் ,கோவைஆவி,ரத்னவேல் அய்யா,கரந்தை ஜெயக்குமார் அண்ணன் அவர்கள் குடும்பத்துடன்...வந்திருந்தார்கள்,தோழர் கில்லர்ஜி,தோழர் கணேஷ்
ஜோக்காளி பகவான்ஜி ,திடங்கொண்டு போராடு தோழர்,இன்னும் பலர்...மதியம் 1.30 வரை அறிமுக நிகழ்ச்சி தொடர்ந்தது...பட்டறிவும் பாடமும் வலைத்தள அம்மா மிகவும் மகிழ்ந்து பேசினார்கள்.நடுவே மதுரையின் ஜிகிர்தண்டா வழங்கி மேலும் சுவை கூட்டினார்கள்.




மதியம் 2.30மணிக்கு இந்திரா சௌந்திரராஜன் வலைப்பூ பற்றி அறியாமல் பேசினார்கள்..இன்னும் சிறப்பான பேச்சாக இருந்திருக்கலாம்..அல்லது வலைப்பூவின் சிறப்பை அறிந்தவர் பேசியிருப்பின் நிகழ்ச்சி கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்...தொடர்ந்து சகோதரர் ஜெயக்குமார் அவர்களின் நூல் வெளியீடு நிகழ்ந்தது..அதையடுத்து சகோதரி கிரேஸ் அவர்களின் நூல் வெளியிடப்பட்டது.
அடுத்ததாக ஒரு கோப்பை மனிதம் நூல் வெளியீடு நிகழ்ச்சி கவிஞர்  நா.முத்துநிலவன் அய்யா நூலை வெளியிட..முனைவர்.வா.நேரு அவர்கள் நூலைப்பெற்றுக்கொண்டார்கள்.எனது மூணாவது நூல்  மிகச்சிறப்பாய் அனைவரின் கைகளிலும் தவழ்ந்தது கண்டு மனம் நெகிழ்ந்தது.

                                       .நூலைப்பற்றியும் நூல் ஆசிரியரைப்பற்றியும் சுருக்கமாக பேசினாலும் முத்திரை பதித்தாற்போல முத்துநிலவன் அய்யா பேசினார்கள்.
நூல் மாதிரியினை பெரிய வடிவில் செய்துதந்து வெளியிட்டு நூலைச்சிறப்பித்தார் .

                 முனைவர் .நேரு அவர்கள் பேசுகையில் இந்நூலைப்பற்றி ஒருமணி நேரம் பேசமுடியும் என்னால் என்று நூலை நுணுக்கமாக ஆய்ந்து பேசியவிதம் மிகச்சிறப்பாய் இருந்தது.

அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய கவிஞர் ஸ்டாலின் நூலில் உள்ள கவிதைகளில் அவருக்குப்பிடித்த கவிதைகள் பற்றி தீர்க்கமான பார்வையில் பேசி கேட்போரின் மனதில் நூலைப்பதியவைத்து விட்டார்...நல்ல ஆழமான பேச்சாக இருந்தது...

அடுத்து பேசிய சகோதரி ஜெயா ,நூல் ஆசிரியரைப்பற்றியும் ,நூலைப்பற்றியும் பேசிய விதத்தில் அனைவரும் மெய்மறந்து மிக ஆழ்ந்து கேட்கும் படி செய்துவிட்டார்

கேளாரும் கேட்கும் வகையில் அனைவரும் வாழ்த்துரை வழங்கி நூலுக்கு அணி சேர்த்தனர்...”.ஒரு கோப்பை மனிதம் “நூல் வெளியீடு மிகச்சிறப்பாய் நிகழ்ந்தது...நூல் வெளியீட்டு விழாவிற்காகவே கடையநல்லூரிலிருந்தும்,சிவகாசியிலிருந்தும்,புதுகையிலிருந்தும் வந்து சுற்றமும் நட்பும் சூழ விழா சிறப்புடன் நிகழ்ந்தது...

விழா முடிவில் ஒரு தோல்பையுடன் ,காலண்டர் அடங்கிய பையும் கொடுத்து மனமும்,செவியும் ,கையும் நிறைய வழி அனுப்பிய விழாக்குழுவினருக்கும் மனம் நிறைந்த நன்றி..

மீண்டும் பயணம் புதுக்கோட்டையை நோக்கி சகோதரர் வழங்கிய தேநீருடன் துவங்கியது...மிகவும் இனிய பயணமாய் ..வலைப்பூ பதிவர் சந்திப்பிற்குச் சென்றதும்,நூல் வெளியிட்டதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாய்..விழாவை சிறப்பித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி...

காலை உணவிற்காக...

விழாவில் ...



வணக்கம் டி.டி.சார்..
வலைப்பதிவர்..அறிமுகம்..நிகழ்வில் பட்டிமன்ற பேச்சாளர்...மகாசுந்தர்.






 நினைவுப்பரிசு..அய்யாவிற்கு
 கரந்தை ஜெயக்குமார் சகோதரரின்” கரந்தை மாமனிதர்கள்” நூல் வெளியீடு..
 முனைவர் ஜம்புலிங்கம் அய்யாவின் வாழ்த்துரை..


 தோழி கிரேஸின் அன்பின் வெளிப்பாடு...
தோழி கிரேஸின் -” துளிர்விடும் விதைகள்” நூல் வெளியீடு

சகோ கஸ்தூரிரங்கன் - வாழ்த்துரை



 எனது”ஒரு கோப்பை மனிதம்” ---நூல் வெளியீடு.....

,ஜெயலெக்‌ஷ்மி,அய்யா,முனைவர் நேரு,ஸ்டாலின் ஆகியோருடன்..

 முனைவர் நேரு அவர்களின் வாழ்த்துரை..
 கவிஞர் ஸ்டாலின் வாழ்த்துரை...
 தேநீருடன் வடையும் வழங்கும் பகவான்ஜியும்,திண்டுக்கல் தனபாலன் சாரும்.



 வாழ்த்துரை வழங்கிய உதவி தொடக்கக்கல்வி அலுவலரும் தோழியுமான ஜெயா..
 ஏற்புரையில்..
 தங்கை மைதிலிக்கு மகிழ்வுடன் ..
சட்டப்பார்வை  திரு பி.ஆர்.ஜெயராமன் அவர்களின்” நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க.”.



 முரளிதரன் சாருடன் சகோ..

 விழா நிறைவில்....

விழாவை  சிறப்புடன் நடத்திய சீனா அய்யா.தமிழ்வாசி பிரகாஷ்,ரமணி சார்,திண்டுக்கல்தனபாலன் சார்,பகவான்ஜி,தமிழன் கோவிந்தராஜ்,மதுரைசரவணன் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி


                






34 comments:

  1. ஆசிரியரே... சில படங்களை தங்களின் அனுமதியோடு எடுத்துக் கொள்ளலாமா...?

    நன்றிகள் பல...

    ReplyDelete
  2. ஆஹா தாராளமாக இன்னும் வேணுமென்றாலும் தாங்கள் கைகூப்பியது போல.நிறைய படங்கள் உள்ளன..அனுப்பி வைக்கின்றேன் சார்..

    ReplyDelete
  3. படங்களுடன் பதிவும் ,புத்தக வெளியீடு விழா போன்றே அருமை !
    #தேநீருடன் வடையும் வழங்கும் பகவான்ஜியும்,திண்டுக்கல் தனபாலன் சாரும்#
    நாங்கள் நேற்று 'வடைப்பதிவர்'களும் ஆனோம் :)
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ஆகா... பகவான்ஜீ! தங்களின் நகைச்சுவை உணர்வே தனிச்சிறப்புத்தான் வடைப்பதிவரே! நன்றி நன்றி.

      Delete
    2. அன்று காலையில் ருசித்த ஜிகர்தண்டா போல் இனிக்கிறது அய்யா உங்கள் பாராட்டு :)

      Delete
  4. ஆஹா சார்...உங்களை விழாவில் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி..தொடருவோம்...

    ReplyDelete
  5. அசத்திட்டீங்க சகோதரி..! செய்தியும் படங்களும் சூப்பர் ..!
    சுடச் சுடப் படங்களையும் வெளியிட்டுக் கலக்கிட்டீங்க...!
    ...வாழ்த்துகள்.!

    ReplyDelete
  6. மிக்க நன்றி சகோ..உங்க படம் ஏகப்பட்டது இருக்கே ...கஸ்தூரி சகோ உங்கள சுட்டுதள்ளியிருக்கார்போல..

    ReplyDelete
  7. அருமை அருமை! சகோதரீ. கவிதைத் தொகுப்பும்அருமை! கவிதை வெளியீட்டுத் தொகுப்பும் மிக அருமை! உங்கள் பதிவில் சில படங்களைச் சுட்டுக்கொள்ளலாமா என்னும் திண்டுக்கல் வலைச்சித்தரின் கேள்வியையே நானும் வழிமொழிந்து கேட்கிறேன். நன்றி. (அடுத்த விழா நம்முறை!)

    ReplyDelete
  8. இதையெல்லாம் கேக்கனுமா என்ன ...அண்ணா..அடுத்த சந்திப்பை கலக்கிடுவோம்ல

    ReplyDelete
  9. படங்கள் அனைத்தும் அருமை சகோதரி ..நேரில் அங்கிருந்தது போன்ற உணர்வு அனைவரையும் ஒரு சேர பார்த்ததில் மிக்க சந்தோஷம் .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. மிகவும் இனிமையான சந்திப்பு...மிக்கநன்றிமா

      Delete
  10. ஒவ்வொரு நிகழ்வையும் சுவைபட எழுதி நேரலை போல் படங்கள் வெளியிட்டமைக்கு நன்றி ஒரு கோப்பை மனிதம் நூல்
    வாசிக்க ஆரம்பித்துள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. வாசித்துவிட்டு கட்டாயம் நிறைகுறைகளைக்கூறவும்...நன்றி

      Delete
  11. மதுரைப் பதிவர் திருவிழாவை
    ஒளிப்படங்களுடன் பார்த்தேன்
    அருமைான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  12. மேலும் பல புத்தகங்களை வெளியிட வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..

      Delete
  13. படங்களுடன் பகிர்வு பிரமாதம். பகவான்ஜி யின் பின்னூட்டம் சிரிக்க வைத்தது! டிடி ஹீரோ போல இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் புன்னகை மன்னர்களாகவே பகவான்ஜியும் டிடி சாரும் அன்று விழாவில் ....

      Delete
  14. சகோதரியின் “ஒரு கோப்பை மனிதம் நூல் வெளியீட்டு விழா” நன்கு சிறப்பாகவே அமைந்த்தது. கல்வித்துறை ஜெயலட்சுமி அவர்களுக்கு உங்கள் நூலின் மீதும் உங்கள் நட்பின் மீதும் இருக்கும் ஆர்வம் அவருடைய பேச்சினில் தொனித்தது. ஸ்டாலின் சரவணன் அவர்களும் விட்டால் நாள் முழுக்க நூல் விமர்சனம் செய்யும் திறமை பெற்றவர்தான். நீங்கள் உருவாக்கிய ஒரு கோப்பை மனிதத்தை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

    வலைப்பதிவில் படங்களின் பகிர்வும் கட்டுரையும் சிறப்பாக உள்ளன...உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்..உண்மைதான் என் மேல் கொண்ட அன்பு தான் அனைத்திற்கும் காரணம்..

      Delete
  15. அனைவரையும் சந்தித்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்ததும்மா கீதா. உங்க புத்தக வெளியீட்டுல தோழி ஜெயலக்க்ஷ்மி ஆற்றின உரை அபாரம். படங்களும் நல்லாவே இருக்குது. அடுத்த ஆண்டு உங்க பகுதிக்கு வரும்வரை நினைவில் பசுமையாகத் தங்கிவிடுகிற ஒரு நிகழ்வு மதுரை நிகழ்வு.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார் ..விழாவில் உங்களைச்சந்தித்தது மிக்க மகிழ்ச்சி..புதுகையில் சந்திப்போம்..

      Delete
  16. நான் நேரலை ஒளிபரப்பை பார்த்தேன் தோழி ஊமைப் படம் போல் இருந்தாலும் அதுவரையாவது பார்க்க கிடைத்ததில் திருப்தியே தாங்கள் வெளியிடும் போது பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். பலரை அறிந்து கொள்ள முடியவில்லை. அம்முவையும் காணவில்லை . தற்போது இப் படங்களில் தான் பார்க்கிறேன். எதோ நேரில் தங்களோடு கலந்தது போன்ற உணர்வே தோன்றுகிறது. படங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி தோழி.! சாதித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்....! மேலும் மேலும்பல படைப்புகளை படைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் ....!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அணிந்துரையை எல்லோரும் பாராட்டினார்கள்..மிக்க நன்றிம்மா விழாசிறப்பாக இருந்தது..

      Delete
  17. படங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி
    பாராட்டுக்கள்....!
    Vetha.Langathilakam

    ReplyDelete
    Replies
    1. நன்றி பா உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியே

      Delete
  18. அற்புதமா இருக்கு சகோதரி படங்களும் தகவல்களும்.திரு.பாலகணேஷ் ,திரு.தமிழ் இளங்கோ இருவருக்கும் மிக்க நன்றி. அரிய வாய்ப்பை வழங்கிய சகோதரிக்கு உளமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  19. அருமை சகோதரியாரே
    படங்களுடன் ஓர் இனமைப் பதிவு
    வாழ்வின் மறக்க இயலா நாட்களுள் ஒன்றாகிப் போனது
    வலைப் பதிவர் திருவிழா
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  20. உங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி சகோதரி....

    ReplyDelete
  21. உங்களை விழாவில் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. படங்களின் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  22. மதுரை விழாவில் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நிகழ்வினைத் தாங்கள் பதிந்துள்ள விதம்அருமையாக உள்ளது. தங்களது எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள். வலையுலக நட்பினைத் தொடர்வோம்.

    ReplyDelete
  23. இந்த வலைப்பதிவுத் திருவிழாவின் சிறப்புகளில் ஒன்று. புதுகைப் பதிவர்களின் சிறப்பான பங்கேற்பே. அடுத்த வலைபதிவு சந்திப்பு அசத்தலாக இருக்கும் என்பதை உறுதிப் படுத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...