Thursday, 9 October 2014

மெல்லத் தமிழ் இனி....

நேற்று தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன..

மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாகச் செய்தனர்...முடிவாக

தமிழ்த் துறைத் தலைவர் ” மனதிற்கு வேதனையாக உள்ளது...பல மாணவர்கள் தமிழில் பெரும் பிழைகள் செய்துள்ளனர்...இப்படி தமிழ் வளரும் சந்ததியிடம் இருப்பின் மெல்லத் தமிழினிச் சாகும் என்ற கூற்று மெய்யாகுமோ என வேதனையாக உள்ளது.. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழை இவ்வளவு பிழையாக எழுதினால் என்ன செய்வது..?என்று வருத்தத்துடன் கூறினார்...

மனதில் உறுத்தல் அதிகமாகின்றது..

.ஒருவரின் தாய் மொழி பிழையாக எழுதுவதை அலட்சியபடுத்துவது என்பது மொழி அழிவின் துவக்கமல்லவா? தமிழாசிரியர்கள்,தமிழ் உணர்வாளர்களின் குழந்தைகள் கூட தமிழில் திறமில்லாத நிலை..மட்டுமல்ல தமிழை வெறுக்கும் நிலை..

உன் தமிழை வச்சுகிட்டு ஒண்ணும் செய்ய முடியாதென, தமிழ்ச்சமூகம் மனதில் பதிய வைத்துவிட்டது..மொழி பண்பாட்டின் சின்னம் ..அதை புறக்கணித்தல் என்பது கொடுமை...

மதிப்பெண்ணிற்காக தமிழ் இல்லை..வாழ்க்கைக்காக ....நம்மை நாம் உணர்வதற்காக ...கட் ஆஃப் மார்க் நோக்கி ஓடும் தமிழ்ச் சமுதாயம்...தமிழையும் அதில் இணைத்தால் தான் சற்று திரும்பியாவது பார்க்கும்..நிலை

.ஒரு பக்கம் கணினியில் தமிழ் வளரும் நிலை..

ஒரு பக்கம் வளரும் சந்ததிகளிடம் தமிழ் குறித்த அலட்சியம்...

ஒரு மாணவன் பேசினான்”ஒருவனின் தாய் மொழியை அழிக்க வேண்டுமெனில் ,அவன் மனதில் அவனது மொழி குறித்த அலட்சியத்தை,தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விட்டால் போதும் அது தானாக அழிந்து விடுமென்று...”

குழந்தைகளிடம் தவறு இல்லை..நாம் தான் எங்கோ தவறு செய்கின்றோம்...?கல்வியைச் சுமையாக்கி வாசிப்பது என்பதையே மாணவர்களை வெறுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டோம்...பிற நூல்களைப்படிப்பதைக்கூட மாணவர்கள் விரும்ப வில்லை...

என்ன செய்யப்போகின்றோம்...?.நம் குழந்தைகள் தமிழ் மொழியை நேசிக்க வைக்க..?



6 comments:

  1. நியாயமான கவலை தான் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே இவ்வளவு கவலைப் படுகிறீர்களே அப்போ எங்கள் நிலையை நினைத்துப் பாருங்கள் தோழி இந்த வேதனையை என்ன சொல்வது. ரொம்பக் கடினம் இல்லையா. யாரை நோவது எல்லாம் விதியா சதியா. ம்..ம்..
    நந்தி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. குழந்தைகளிடம் தவறு இல்லை..நாம் தான் எங்கோ தவறு செய்கின்றோம்...?கல்வியைச் சுமையாக்கி வாசிப்பது என்பதையே மாணவர்களை வெறுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டோம்...பிற நூல்களைப்படிப்பதைக்கூட மாணவர்கள் விரும்ப வில்லை...//

    மிக மிக அருமையான வரிகள்! வாசிப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது. அதற்கு ஒரு காரணம் தற்போதையக் கல்வி, நாளைய வயிற்றுப் பிழப்பைச் சார்ந்ததாக அமைந்து விட்டதாலும், படிப்பின் சுமையும் அதிகரித்து அழுத்தம் உருவாகும் நிலையில் வந்து விட்டதாலும், இருக்கலாம். எத்தனைக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், பெற்றோரும் குழந்தைகளை சிறுவயது முதல் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் மிகவும் நல்லது. பெற்றோரும் வயிற்றுப் பிழைப்பும், சமூகத்தில் மதிப்பு (சோசியல் ஸ்டேட்டஸ்) என்று சிந்திக்கத் தொடங்கி இயந்திர கதியாகிவிட்டதால், குழந்தைகளும் அப்படியே உருவாகி வருகின்றார்களோ?!!!

    ReplyDelete
  4. நிறய செய்யலாம் சகோதரி...
    செய்வோம்..

    ReplyDelete
  5. ///குழந்தைகளிடம் தவறு இல்லை..நாம் தான் எங்கோ தவறு செய்கின்றோம்...?///
    தமிழ் என்பது அவர்களுக்கு ஒரு பாடமாக மட்டுமே தெரிகிறது

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...