Wednesday, 22 October 2014

ஒரு கோப்பை மனிதத்தில் ஒரு துளி

ஒரு கோப்பை மனிதம்-எனது கவிதை நூலில் ஒரு துளி

தீபாவளிக்கவிதை-பட்டாசுக்கனவில்

ஏன் அம்மா
நாம் வெடித்து மகிழ்வதெப்போ”?
அடுத்த ஆண்டு காசு வரும்
கட்டாயம் வாங்கிடலாம்
என்றாள் அன்னை..

மத்தாப்பூக்குச்சிகளை
அடுக்கிய தங்கச்சியோ
எனக்கு எனக்கும் என்றாள்

இயலாத புன்சிரிப்பில்
தங்கமே தவறாது
வாங்குவோம் என்றாள்..

வெடிமருந்து அடுக்கிக்கொண்டே
கிழிந்த முந்தானையால்
முகம் துடைக்க எத்தனித்த வேளையிலே
இடியொன்று இறங்கியது போல்

பட்டாசுடன் பட்டாசாய்
வெடித்துசிதறி
அன்புமகனே
ஆசையாய் நீகேட்ட
வான்வெடிய பார்த்துக்கோவென்றாள்..



3 comments:

  1. பட்டாசுக் கனவு பதை பதைக்க வைத்தது!

    இப்படி எத்தனை பிஞ்சுகள்....

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. பதற வைக்கும் பட்டாசு
    பறிக்கும் பல வாழ்க்கை. நெஞ்சமெல்லாம் எரிகிறது!.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...